பொது சிவில் சட்டம் கோரி தனிநபர் மசோதாவாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

பொது சிவில் சட்டம் கோரி தனிநபர் மசோதாவாம்!

 மாநிலங்களவையில் அறிமுக நிலையிலேயே தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி, டிச.12 பொது சிவில் சட்டத்தை உரு வாக்குவதற்காக குழு அமைக்கக் கோரி, மாநிலங் களவையில் வெள்ளிக்கிழமை தனிநபர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

‘பொது சிவில் சட்டம்-2020’ என்ற இந்த மசோதாவை, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரோடி லால் மீனா அறிமுகப்படுத்தினார். அதில், பொது சிவில் சட்டம் உருவாக்கம், தேசிய அள விலான அமலாக்கம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்களுக்காக தேசிய கண்காணிப்பு மற்றும் விசாரணைக் குழுவை அமைக்க கோரப்பட் டுள்ளது.

முன்னதாக, இந்த மசோதாவை அறிமுகப் படுத்த திமுக, மதிமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இம்மசோதா நிறைவேற்றப் பட்டால், நாட்டின் சமூக கட்டமைப்பு, வேற்று மையில் ஒற்றுமை ஆகியவை அழிந்துவிடும் என்று அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ கூறுகையில், ‘ஆர்எஸ்எசின் சித்தாந்தங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றிய பாஜக அரசு அமல் படுத்துகிறது. ஏற்கெனவே காஷ்மீரை முடித்து விட்டனர். இப்போது பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். இது நாட்டின் பேரழிவுக்கு வழிவகுக்கும். சிறுபான்மையின மக்கள் கடுமை யாக பாதிக்கப்படுவர்’ என்றார்.

திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா பேசுகையில், மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்தான் இந்த நாட்டின் அடிப்படை. இவை இப்போது ஆபத்தில் உள்ளது. இது ஒரு தனியார் மசோதாவாக இருந்தாலும், இந்த மசோதா இங்கே நிறைவேற்றப்பட்டால், நாளை ஏதாவது நடக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டின் எதிர்காலம், அனைவரின் பாது காப்பையும் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தனித்துவம் பேணப்பட வேண்டும். இந்த மசோ தாவை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றார்.

திரிணாமூல் காங்கிரஸின் ஜாவர் சிர்கார் பேசுகையில், ‘இந்த தனிநபர் மசோதா, அரசியல் சாசனத்துக்கும் நெறிமுறைகளுக்கும் மதச்சார் பின்மைக்கும் முற்றிலும் புறம்பானது. இதன்மூலம் ஆபத்தான விளையாட்டில் ஒன்றிய அரசு ஈடு படுகிறது’ என்றார். இந்த மசோதா அரசியல் சாசன கோட் பாடுகளுக்கு எதிரானது என்று சமாஜ் வாதியின் ராம் கோபால் வர்மா குற்றம்சாட்டினார்.

‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில்தான் இந்திய ஜனநாயகத்தின் அழகும் தனித்துவமும் அடங்கியுள்ளது. அதை காப்பது மிக முக்கியமானது. பன்முகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இம்மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸின் பவுசியா கான் குறிப் பிட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ‘அவையில் ஒரு விவகாரத்தை எழுப்புவது உறுப்பினரின் சட்டப்பூர்வ உரிமை. அதன் மீது விவாதம் நடைபெற அனுமதிக்கப்பட வேண்டும். அறிமுக நிலையிலேயே மசோதாவை எதிர்ப்பது முறையற்றது’ என்றார்.

இதையடுத்து, மசோதாவை அறிமுகப்படுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நடத்தினார். அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் பதிவாகின.

மாநிலங்களவையில் கடந்த காலங்களிலும் இந்த மசோதா அறிமுகத்துக்காக பட்டியலிடப் பட்டிருந்தது. ஆனால், மசோதா அறிமுகம் செய் யப்படவில்லை. தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா அறிமுகமாகியுள்ளது.

கட்கரி வலியுறுத்தல்: இதனிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமலாக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவே தேசத்துக்கும் மனித குலத்துக்கும் நல்லது’ என்றார்.

No comments:

Post a Comment