தருமபுரி, டிச. 13-- தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கழக கலைத்துறையின் சார்பில், திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரசு கல்லூரி விடுதி மாணவிகள், மற் றும் அரசுப் பள்ளி விடுதி மாண வர்கள், 90 பேருக்கு போர்வையும், 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் சிறப்பான பணியை குறிக்கும் வகையில் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாப்பி ரெட்டிப்பட்டி நரசுஸ் காபி திரு மண மண்டபத்தில் 9.12.2022ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக மாநில பகுத் தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி தலைமை தாங் கினார். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் அசிப், அரசு மாணவர் விடுதி காப்பாளர், மண்டல கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட தொழிலாளர் அணி செய லாளர் இரா. சேட்டு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செய லாளர் கு. தங்கராஜ், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
விடுதி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜி, பேரூராட்சி மன்ற தலைவர் செங் கல் மாரி ஆகியோர் இணைந்து போர்வை மற்றும் நலத்திட்ட உத விகளை வழங்கினர். மாவட்ட இளைஞரணி தலைவரும் கழக சொற் பொழிவாளருமான. த.மு. யாழ் திலீபன் உரை யாற்றினார்.
ஒன்றிய செயலாளர் நல்.இராஜா, நகர அமைப்பாளர் மணி, இளைஞர் அணி தோழர்கள் மோகன் குமார், நவீன் குமார், சத்யபிரியா, நாச்சியப்பன், தென்றல் பிரியன், சிவானந்தம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.
No comments:
Post a Comment