அய்யப்பன் காப்பாற்றவில்லையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

அய்யப்பன் காப்பாற்றவில்லையே!

சென்னை அய்யப்ப பக்தர்கள் சென்ற பேருந்து எருமேலியில் விபத்து; 10 வயது சிறுமி பலி

சென்னை, டிச 17- சென்னையில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை கன்னிமலை எரு மேலியில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 16 பேர் காயமடைந்து உள்ளனர். 

இந்த விபத்தில் உயிரிழந்த சிறுமி தாம்பரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சபரி மலைக்கு குழுவாக பல்வேறு வாக னங்களில் அய்யப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை தாம்பரத்திலிருந்து 21 பேர் கொண்ட அய்யப்ப பக்தர் கள் குழு வேன் ஒன்றில் சபரி மலைக்குச் சென்ற நிலையில், நேற்று மாலை 3.30 மணி அளவில் சபரிமலையை அடுத்த எரிமேலி சாலை வழியாக வந்தபோது கன்னி மலா என்ற மலைப்பாதை அருகே வந்து கொண்டிருந்த வேன் திடீ ரென கட்டுப்பாட்டை இழந்தது.அப்பொழுது  வாகனம் சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி பள்ளத் தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. 

இதில் வேனில் பயணித்த 21 பேரில் 17 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 10 வயது சிறுமி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த அனை வரும் காஞ்சிரப்பள்ளி மற்றும் கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த விபத்து குறித்து கோட்ட யம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சபரிமலைக்குச் சென்று வேன் கவிழ்ந்து சிறுமி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

No comments:

Post a Comment