"இந்துமதம் மக்களுக்கு என்ன செய்தது?" நூல் ஆசிரியர் ம.வீ.கி.சாமி நினைவு - நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

"இந்துமதம் மக்களுக்கு என்ன செய்தது?" நூல் ஆசிரியர் ம.வீ.கி.சாமி நினைவு - நன்கொடை


திண்டுக்கல் மாவட்டம், சின் னாளப்பட்டியை சார்ந்தவரும், ஆரம்ப கால திராவிட மாணவர் கழக உறுப்பினரும், தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் வசித்த வரும் சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும், "இந்து மதம் மக்களுக்கு என்ன செய் தது?" நூலின் ஆசிரியருமான மறைந்த "சுயமரியாதைச் சுடரொளி" ம.வீ.கி.சாமி அவர் களின் நினைவாக அன்னாரது மகன் கி.இளங்கோவன் சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் மூலமாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக வழங்கினார்.

- - - - -

சேலம் மாவட்ட கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் தொண்டர் கி.ஜவகர் (20.12.2022) 83ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங் கினார். அவரின் பிறந்த நாளை யொட்டி, சேலம் மண்டல, மாவட்ட, மாநகர கழக தோழர்கள், நண்பர் கள், உறவினர்கள் அய்யாவை நேரில் சந்தித்தும், தொலை பேசி வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment