பூடான் எல்லையில் புதிய பாலம் கட்டும் சீனா செயற்கைகோள் படங்கள் வெளியாகின - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

பூடான் எல்லையில் புதிய பாலம் கட்டும் சீனா செயற்கைகோள் படங்கள் வெளியாகின

புதுடில்லி, டிச. 17  அருணாச்சல பிரதேசத்தில் தவாங் செக்டார் பகுதியில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ஆம் தேதி சீன ராணுவத்தினர் 300-க்கும் மேற் பட்டோர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத் தினர் தடுத்தி நிறுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினரின் பதிலடியால் சீன வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். சீன ராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாது காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் சீன ராணுவத்தினர் சென்றபோது அவர்கள் விட்டு சென்ற உபக ரணங்களை இந்திய ராணுவத் தினர் மீட்டுள்ளனர். அவற்றில் ஒரு சில பைகளில் ஆடைகளும், சில பைகளில் கடுமையான குளிரில் வாழ்வதற்கு தேவை யான பொருட்களும் இருந்தன.

இதற்கிடையே பூடான் எல் லையில் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணு வத்தினருக்கிடையே பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந் திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணு வத்தினரிடையே வெடித்த மோதல் 73 நாள் வரை நீடித்தது. அந்த பகுதியில் சீன ராணு வத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப் போது தகவல் வெளியானது. பின்னர் டோக்லாம் அருகே பூடானுக்கு சொந்தமான பகுதி யில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

அதாவது டோக்லாமின் கிழக்கு திசையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி அந்த கிராமத்திற்கு பாங்டா என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் தகவல் வெளியானதோடு, இதுதொடர்பான செயற்கை கோள் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந் நிலையில் தற்போது டோக்லாம் பகுதியில் சீனா ஒரு பாலம் உள்பட புதிய கட்டுமானப் பணிகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. டோக்லாமிற்கு தெற்கு பகுதி யில் லாங் மார்போ எனப்படும் பகுதியில் புதிய கிராமங்கள் காணப்படுகின்றன. பூடான் எல் லையில் சீனாவால் அமைக்கப் பட்டு வரும் இந்த கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சைபுரு, கைடாங்ஷா மற்றும் குலே ஆகிய பகுதிகளிலும் 2 மாதங்களுக்கு மேலாக கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் இந்த கட்டுமானப் பணிகளை இந்தியா கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment