சென்னை,டிச.17- தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர், அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பணி தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர், அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ் நாடு மின் ஆளுமை முகமைக்கு ((TNeGA), துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூ லங்கள் மற்றும் கணக்குத் துறை நியமிக்கப்பட் டுள்ளது.
இந்தத் துறையின் மூலம் பல்வேறு வகையான மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங் களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அதை பெறும் வரையில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங் கப்பட்டுள்ள பிற ஆவணங்களை அடையாளமாக சமர்ப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment