சென்னை, டிச. 4- முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக் களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேற்று (3.12.2022) ஆய்வு நடத்தினார்.
முதலமைச்சரின் குறை தீர்ப்பு துறைகளை ஒருங்கி ணைத்து, ‘முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப் பட்டுள்ளது. உங்கள் தொகுதி யில் முதலமைச்சர், முதலமைச் சரின் உதவி மய்யம், முதலமைச் சரின் தனிப்பிரிவு மற்றும் ஒருங் கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஆகி யவை அனைத்தையும் ஒருங்கி ணைத்து, இனி அவை அனைத் தும் ஒரே துறையாக செயல் படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. அந்தத் துறைக்கு, ‘முதல்வ ரின் முகவரி' என பெயர் வைக் கப்பட்டுள்ளது. புதிதாக உரு வாக்கப்பட்டிருக்கும் ‘முதல்வ ரின் முகவரி' துறைக்கு, சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையில் மனுக்களுக்கு தீர்வு காண, ஒற்றை இணைய தள முகப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
களநிலவரங்களை...
அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர், மனுதாரர் மற் றும் அலுவலர்களை நேரடி யாக தொடர்பு கொண்டும், கள நிலவரங்களை கேட்ட றிந்து வருகிறார். முதலமைச்ச ரின் தனிப்பிரிவில் முந்தைய காலகட்டங்களில், ஆண் டொன்றிற்கு சராசரியாக சுமார் 3 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. தற்போது, அனைத்து குறைதீர் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறைகளுக்குத் தீர்வு
இத்துறையின் வாயிலாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக் கைகள் குறித்தும், முதலமைச்சர் மாவட்டங்களில் மேற்கொள் ளும் சுற்றுப்பயணங்களின் போது பெறப்படும் மனுக்கள் மீதும், அவற்றில் தெரிவிக்கப் படும் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவற்றினை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
புதிய முயற்சிகள்
புதிய முயற்சியாக, முதல மைச்சரின் உதவி மய்யம் மற் றும் மாவட்ட ஆட்சியரகங் களில் கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அனைத்து மனுக்களும் ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டு, தர மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. சரியான முறையில் தீர்வு அளிக்கப்படாத மனுக்களுக்கு மீண்டும் உரிய முறையில் தீர்வு அளிப்பது கண்காணிக்கப்படுகிறது. தமிழ் நாடு முதலமைச்சர் ‘முதல்வரின் முகவரி'த்துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து அம் மனுக்களை விரைவாக சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
உரிய முறையில் தீர்வு...
இந்த ஆய்வின்போது, தமிழ் நாடு முதலமைச்சர், மனுதா ரர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள் ளதா என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒரு சில மனு தாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். நிலுவை ஓய் வூதிய பணப்பயன்கள் தொடர் பாக மனு அளித்திருந்த தேனி மாவட்டம், கம்பம் வட்டத் தைச் சேர்ந்த என்.ரவி என்ப வரை தொடர்பு கொண்டு, மேற்படி கோரிக்கை நிறைவேற் றப்பட்டுள்ளதை கேட்டறிந்து உறுதி செய்தார். மேலும், வேலூர் மாவட்டம், குடியாத் தம் வட்டத்தைச் சார்ந்த ஜெய லட்சுமி மற்றும் சென்னையைச் சார்ந்த எஸ்.லதா ஆகியோரை தொடர்பு கொண்டு, முறையே அர்ச்சக தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் கல்வி உதவித் தொகை தொடர்பான கோரிக் கைகள் நிறைவேற்றப்பட்டுள் ளதை உறுதி செய்தார். மனுக் களை திறம்படவும் விரைவாக வும் தீர்வு செய்த திருச்சி மாவட்டம், முசிறி துணை காவல் கண்காணிப்பாளர், சிவ கங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் மற்றும் திருவண் ணாமலை மாவட்டம், போளூர் தனி வட்டாட்சியர் ஆகியோரை பாராட்டியும், கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் செங் கல்பட்டு மாவட்டப் பதிவா ளர் ஆகியோரையும் தொடர்பு கொண்டு, உரிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வு கூட்டத்தில்...
முன்னதாக, முதலமைச்சர் இத்துறையின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்படு கிறதா என்பதை 28.5.2021, 5.10.2021, 26.7.2022 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வுக் கூட்டத் தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment