காஞ்சனா போஸ் மறைவுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

காஞ்சனா போஸ் மறைவுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

சிவகாசி, டிச. 5- சிவகாசி தொழிலதிபர் தொண்ட றச் செம்மல் சுயமரியா தைச் சுடரொளி அ.சுபாஷ் சந்திரபோசின் இணையர் திருமதி காஞ்சனா போஸ் 1.12.2022 வியாழன் மாலை 6 மணியளவில் உடல் நலக் குறைவு கார ணமாக இயற்கை எய்தி னார். 

பொதுக்குழு உறுப்பி னர் வானவில் வ.மணி, மாவட்ட கழக செயலா ளர் விடுதலை தி.ஆதவன், மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட கழக இளைஞ ரணித் துணைச்செயலா ளர் ம.கதிரவன், சுயமரி யாதைச் சுடரொளி எஸ். பி.மணியம் குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று மலர் மாலை அணிவித்து இறுதிமரி யாதை செலுத்தினர். திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங் கல் செய்தி இல்லத்தார் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக் கும் வழங்கப்பட்டது. 2.12.2022 வெள்ளி மாலை 5 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.


No comments:

Post a Comment