பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பாதையிலே
பண்புமிக்க தலைவராக பாசத்தோடு நடைபோட்டு
அகத்தூய்மை கொண்டுமிக ஆளுமையில் சிறந்தென்றும்
சுயமரியாதை போற்றும் வீரமணியார் வாழ்க வாழ்க!
அறியாமை இருளகற்றி விடுதலை வேண்டுமென்று
அறியாத மக்களுக்காய் அர்ப்பணித்தார் தன் வாழ்வை
பெரியாரின் தூதுவராய் பெற்றெடுத்த தலைமகனாய்
பேருள்ளம் கொண்டொழுகும் கி.வீரமணியார் வாழ்க வாழ்க!
அகவை தொண்ணூறு ஆண்டுகள் ஆயினும்
அழகு இளமைநல் இளைஞர் போன்று
சுகமாய் என்றும் நலமுடன் திகழும்
சுந்தர ரூபன் வீரமணியார் வாழ்க வாழ்க!
எளிமை வாழ்க்கை இனிமைப் பேச்சு
எவரையும் அன்பால் இணைக்கும் பான்மை
தெளிவும் தன்னல மில்லா சேவையும்
தேர்ந்தநல் கொள்கை கொண்டோய் வாழ்க வாழ்க!
எங்கள் விஜிபி குடும்பத்தில் ஒருவராய்
என்றும் இருப்பவரே ஏந்தலே தமிழ்வேந்தரே
தங்கம் மனசு தயாள சிந்தை கொண்ட
தங்கள் பிறந்தநாள் இந்நாள் வாழ்க வாழ்க!
பண்பும் பாசமும் கொண்டு பழகும்
பண்பாளரே கல்வித் தந்தையே வாழ்க!
என்றும் இன்மாய் இனிதுடன் வாழ
என்மனம் வாழ்த்தும் நீடூழி வாழ்க வாழ்க!
No comments:
Post a Comment