புதுடில்லி, டிச.10 மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி விரைவில் தொடங் கும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்க ளவையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;- "மதுரை எய்ம்ஸ் கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். கட்டட வடிவமைப்பில் செய்யப்பட்ட மாறுதல் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால், திட்ட செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக உயர்ந்துவிட்டது. மதுரை எய்ம்ஸ் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, கவலை வேண்டாம். கட்டுமானப் பணியை திட்டமிட்டபடி முடிப் போம். மதுரையில், நல்ல, தரமான எய்ம்ஸ் அமையும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம் கடந்த 2018இல் தேர்வு செய்யப் பட்டது. பின்னர், 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன் பிறகு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணியையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. மதுரை எய்ம்ஸ் அறிவிப்புக்குப் பிறகு வேறு சில வடமாநிலங்களில் அறிவிக் கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது கட்டப்பட்டு திறக்கப் பட்டும் விட்டன.
செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக அகில இந்திய தலைவர் ஜே..பி. நட்டா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 95 சதவீதம் முடிந்துவிட்டன - விரைவில் திறக்கப்படும் என்றார்.
ஆனால் தற்போது நாடாளுமன் றத்தில் கட்டுமானப்பணிகூட துவங்க வில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment