தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரளக் கழிவுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரளக் கழிவுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, டிச. 17- கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட் டப்படுவது தொடர்பாக தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு - கேரள எல்லையான பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை பகுதியில் கேரளகழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந் தது. கடந்த ஆண்டு கேரளாவிலி ருந்து எடுத்து வரப்பட்ட மருத்து வக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்து வந்த 3 லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர் இதே போன்று தமிழ்நாடு - கேரள எல் லைப்பகுதியான தென்காசி, கன்னி யாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கேரளாவில் இருந்து வாகனங்களில் எடுத்து வரப்படும் மருத்துவக் கழி வுகள் கொட்டப்படுவதாக புகார் கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப் பினரான நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பின ரான சத்தியகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, விருது நகர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களும், கேரள மாநிலத் தில் உள்ள திருவனந்தபுரம், கொல் லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment