பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
சமூகநீதிக்கான வீரமணி விருதை நான் மிகவும் கவுரவம்மிக்க ஒரு விருதாகக் கருதுகிறேன். பீகார் மக்களின் சார்பாக நான் இந்த விருதைப் பெற்றுக் கொள்கிறேன். குறிப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1925ஆம் ஆண்டிலிருந்து நீங்களும் சமூகநீதிக்காகக் களம் கண்டு வந்திருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களை நான் மூன்று நாள்களாக உங்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். நீங்கள் இங்கே உரையாற்றிய போதும் உங்கள் சமூகநீதிக்கான பயணம் குறித்து அறிந்து கொண்டோம். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் இங்கே வரவேண்டும், வரவேண்டும், மீண்டும் மீண்டும் வரவேண்டும். பீகார் மக்களின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் பீகாரையும் உங்களது மற்றோர் ஊராக நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களின் சிந்தனையை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். பீகார் அரசின் முக்கியக் கொள்கையே சமூகநீதியோடு கலந்த வளர்ச்சிதான், நாங்கள் வெறும் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசமாட்டோம். எங்கள் வளர்ச்சி சமூகநீதியை ஒன்று சேர்த்துக் கொண்டுசெல்லும் வளர்ச்சியாகும். அதாவது வளர்ச்சியின் லாபம் சமூகத்தில் மிகவும் ஏழ்மைப்பட்ட குடிமகனுக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதே ஆகும்.’’
"விடுதலை"
No comments:
Post a Comment