விண்ணகம் போல் விரி அறிவுத்
தலைவர் ஒளிர் வீரமணியார்,
மண்ணகமே புகழ் தந்தை
பெரியார் தம் மகன் ஆனார்!
தொண்ணூறாம் அகவையினை
திசம்பர் இரண் டில் தொடுவார்!
நுண்ணறிவு வழிகாட்டி
நூறு ஆண்டும் தாண்டி வாழ்க!
சொற்பொழிவைத் தேன் மழையின்
சுவை பொங்கப் பொழிந்திடுவார்!
தற்பெருமை கடுகுமில்லார்
தமிழ்ப் பொழிலே வீரமணியார்!
சிற்பி என கட்டுரைகள்
சிலை வடிக்கும் எழுத்து மன்னர்!
கற்க வைப்பார் திராவிடர்
கழகநெறி; கதிரவனே!
பத்(து) அகவை எட்டு முன்னே
பையனிவரை மேடையிலே
சத்துரையே பேசவைத்தார்
‘டார்ப்பிடோ’ சனார்த்தனமே!
முத்தமிழை வளர்க்கும் இதழ்
“விடுதலை“யின் பேராசான்
சித்தர் நிகர் வீரமணியை
மறைமலையான் வாழ்த்துவனே!
No comments:
Post a Comment