பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு - சிறப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு - சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி, டிச. 7- உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்தை முன் னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரியில்  பெரியார் நலவாழ்வு சங்கத்தின் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்த ரங்கம் 01.12.2022 அன்று மாலை 2 மணியளவில் நடத்தப்பட்டது. 

பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் திருச்சி வர்ஷினி மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. பிரபா தங்கராஜ் எய்ட்ஸ் நோய் குறித்து சிறப்புரையாற்றினார். 

அவர் தமது உரையில் உலக அளவில் 4.9  மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், நம் இந்தியா வில் 1.6 மில்லியன் மக்கள் இந் நோய்க்கு ஆளாகியிருப்பதாக வும் உரையாற்றினார்.  மாலை நேரங்களில் காய்ச்சல், எடை குறைதல், இரவில் அதிக வியர்வை, வயிற்றுப் போக்கு போன்றவை இந்நோயின் முக் கிய அறிகுறிகளாகும். இந்நோய் வந்தவுடன் சந்தர்ப்பவாத நோய் களான காசநோய், டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அபாயம் உள்ள தாகவும், இந்நோய் பாதித்த மூன்று வாரத்தில் கூட நாம் பரிசோதித்தால் இந்நோயின் தாக்கம் நமக்கு தெரியாது என் றும் கூறினார். 

எய்ட்ஸ் நோயினால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தேவை யான மருந்துகள் அதிக அளவில் கிடைப்பதாகவும் தற்பொழுது இந்நோயினால் பாதிக்கப்பட்ட வர்களின் ஆயுட்காலமும் அதிக மாகி வருகிறது என்றும் உரை யாற்றினார். 

சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற நோய்களைப் போன்றே எய்ட்ஸ் நோயும் தொடர்ந்து மருந்துகளை எடுத் துக் கொண்டால் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வரலாம் என்ற  விழிப்புணர்வை பொது மக்களுக்கு எடுத்துச் செல்வ தோடு மட்டுமல்லாமல் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர் களை ஒதுக்காமல் அவர்களும் மனிதர்கள், அவர்களை தொடுவ தினாலோ, அவர்களுடன் இணைந்து செயல்படுவதி னாலோ எய்ட்ஸ் பரவாது என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அத்தகைய தீண்டாமை நோயை விரட் டினாலே எய்ட்ஸ் இல்லா உல கத்தை உருவாக்க முடியும் என்று கூறி பார்வையாளர்களின் கேள் விகளுக்கு பதிலளித்தார். 

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். 

இக்கருத்தரங்கில் கல்லூரி யின் பேராசிரியர்கள், பணியா ளர்கள் மற்றும்  மாணவச்செல் வங்கள் உட்பட 300க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இக்கருத்தரங்க ஏற்பாட்டை பெரியார் நல வாழ்வு சங்க செயலர் பேரா. க. அ. ச. முகம்மது ஷபீக் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெயலட்சுமி சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment