லக்னோ,டிச.8- ‘புனித‘மான பாரத திருநாட்டின் பழங்கதை (இதிகாசம்) மகாபாரதம். அதில் பஞ்ச பாண்டவர்களின் ஒரே மனைவியான திரவுபதையை சூதாட்டத்தில் அடமானம் வைத்து விளையாடி தோற்றனர் என்று உள்ளது. அந்த மகா பாரதக் கதையின் தொடர்ச்சி யாக நாட்டில் இன்னமும் சூதாட்டங்களில் பெண்ணை அடகு வைக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைபோடும் சட்டம் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டும், சனாதனத்தை வலியுறுத்தி வருகின்ற ஆளுந ரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் ஜனநாயக விரோத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பாஜக ஆளும் உத்தரப் பிர தேசத்தில் ஆன்-லைன் லுடோ விளையாட்டில் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண் ஒருவர் தோல்வி கண் டார். இதையடுத்து அவரை மீட்டுத் தரக்கோரி பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேணு என்ற பெண், ஆன்-லைன் லுடோ விளையாட்டுக்கு அடி மையாகி தன்னைத்தானே அடகு வைத்து விளையாடியுள்ளார். ஆஸம்கர் மாவட்டத்திலுள்ள நாகர் கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி. இந்த தேவ்கலி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ரேணு. இவர் தனது கணவர், 2 குழந்தை களு டன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் உமேஷ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் வேலை செய்து வருகிறார். தனது கணவர் மாதம் தோறும் அனுப்பும் பணத்தை வைத்து தனது வீட்டின் உரி மையாளருடன் 'லுடோ' ஆன்-லைன் விளையாட்டை விளை யாடி வந்துள்ளார்.
கணவர் அனுப்பிய பணம் முழுவதையும் ஆன்-லைன் லுடோ சூதாட்டத்தில் இழந்த ரேணு, ஒரு கட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து விளையாடி யுள்ளார். இதில் தோல்வி கண்ட தால் அந்த வீட்டின் உரிமையாள ருடன் ரேணு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த விவரங்களை அறிந்த ரேணுவின் கணவர் உமேஷ். காவல்துறையில் புகார் அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மனைவி லுடோ விளையாட்டில் தோற் றதால், வெற்றி பெற்றவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது 2 குழந்தைகளுக்காக எனது மனைவியை மீட்டுத் தாருங்கள். இல்லாவிட்டால் எங்களது வாழ்க்கையே சூன்ய மாகி விடும். இவ்வாறு புகாரில் உமேஷ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உமேஷ் கொடுத்த புகாரின் பிரதி, சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைர லாகியுள்ளது.
No comments:
Post a Comment