கடவுள் சக்தி இதுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

கடவுள் சக்தி இதுதானா?

தென்ஆப்பிரிக்க ஆற்றங்கரையில் மதச் சடங்குக்காக கூடியவர்களை வெள்ளம் அடித்து சென்றது

ஜோகன்னஸ்பர்க், டிச. 6- தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரான ஜோகன் னஸ்பர்க்கில் ஜுஸ்கி என்கிற மிகப்பெரிய ஆறு உள்ளது. 

உள்ளூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்த ஆற் றின் கரையில் ஞானஸ் நானம் உள்ளிட்ட மதச் சடங்குகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 

ஜுஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்நானம் விழா நடைபெற்றது. 

இதையொட்டி ஏரா ளமான கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையில் நின்றிருந்த பலர் வெள் ளத்தில் அடித்து செல் லப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழு வினர் நிகழ்வு இடத்துக்கு விரைந்து சென்று ஆற் றுக்குள் இறங்கி வெள்ளத் தில் அடித்து செல்லப் பட்ட நபர்களை தேடும் பணியில் இறங்கினர். 2 நாட்களாக இந்த தேடு தல் வேட்டைதொடர்ந் தது. எனினும் 14 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 

இன்னும் சிலர் காணாமல் போய் உள் ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரிய வில்லை.


No comments:

Post a Comment