பெரம்பலூர், டிச. 5 தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நேற்று (4.12.2022) செய்தியாளர்களிடம் அவர் கூறியதா வது: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 20-க்கும் அதிகமான மசோதாக்கள், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் அலுவலகங்களில் நீண்டகாலமாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவ் வாறு மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகம். இந்தச் செயல், மாநில அர சின் செயல்பாட்டை முடக்குவதாகும்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல், அதனால் நேரிடும் உயிர் பலிகளுக்கு ஆளுநர் உடன்படுகிறார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர், நேரில் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்தும், அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீவிர போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இரா.முத்தரசன்
தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை ஆளுநர் ஆர்என்.ரவி நடத்திக் கொண்டிருக் கிறார், என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச் சாட்டு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வில்லி புத்தூரில் அவர் கூறியதாவது: ஆன் லைன் சூதாட்டம் மூலம் 25 பேர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் கேட்பது என்ற பெயரால் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. ஒரு மாநிலத் துக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் வந்தால் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வது உள் துறை அமைச் சகம்தான். ஆனால் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். அண்ணாமலை மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு பிரதமர் பாதுகாப்பு குறித்த நடைமுறை நன்கு தெரியும். ஆனால் தலைமைச் செயலரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டிருப்பது விந் தையாக உள்ளது. ஆளுநர் உள்துறை அமைச்சகத்திடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித் துள்ளனர்.
தமிழ்நாடு அரசுக்கு எதி ராகப் போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-இல்சென்னை ராஜ் பவன் முன்பு, இந் திய கம்யூனிஸ்ட் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment