புதுடில்லி, டிச 22 ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார். அதில் நடைப்பயணத்தில் கரோனா வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், முகக்கவசம், சுத்திகரிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், பொது சுகாதார அவசர நிலையைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றவும் தேசிய நலன் கருதி இந்திய ஒற்றுமைப் பயணத்தை ஒத்திவைக்குமாறும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பு கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளது. குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடி, கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றினாரா? என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் கேள்வி எழுப்பி உள்ளார். ராகுலின் நடைப்பயணம் வெற்றி அடைந்துள்ளதால் மக்களை திசை திருப்ப ஒன்றிய அரசு முயல்வதாக சவுத்ரி சாடியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment