கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் நகர தி.மு.க. அவைத் தலை வரும் மேனாள் பேரூராட்சி தலைவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர்.கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் மீது பேரன்பு கொண்டவரும், காவேரிப்பட் டணம் நகரில் பெரியார் சிலை அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் இயற்றி கொடுத்த வருமான காவேரிப் பட்டணம் த.விவேகானந்தன் 30.11.2022 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவு செய்தி அறிந்து 1.12.2022 காலை 10.00 மணியளவில் காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ. திராவிட மணி, தா.சுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளர் தி.கதிர வன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனிவாசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், மு.மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புகழேந்தி, இளங்கோ, மரு. ஆசைதம்பி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment