8.12.2022
டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:
* ஹிந்துக்களே எங்களுக்கு வாக்களியுங்கள் - மதத் தின் பெயரால் வாக்களிக்க பாஜக தலைவர் வேண்டுகோள்.
டெக்கான் கிரானிக்கல் சென்னை:
* மோடி அரசு மாநில உரிமைகளை பறிக்கும் மசோ தாக்களை நிறைவேற்ற துடிக்கிறது என மம்தா குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* 2021-2022இல் 20,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சுக்லாவின் கேள்விக்கு பதிலளித்த கல்வித் துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி புள்ளி விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
* இந்தியாவின் சோகம் என்னவென்றால், நவீனக் கல்வி என்று சொல்லப்படும் கல்வியைப் பெறுவதற்கு போதுமான சலுகை பெற்ற இளைஞர்கள் ஜாதிய ஒடுக்கு முறைக்கு கருவியாகவோ அல்லது குற்றவாளிகளாகவோ இருக்கிறார்கள் என்கிறது தலையங்க செய்தி
* மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது. தீண்டாமை வரலாற்று ரீதியாக ஹிந்துக்களிடையே மட்டுமே இருந்தது, இஸ்லாம் அல்லது கிறிஸ்தவத்தில் இல்லை என்று மோடி அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்!
- குடந்தை கருணா
No comments:
Post a Comment