சமூக நீதிக்கான போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

சமூக நீதிக்கான போராட்டம்

தந்தை பெரியார் இடைவிடாது போராடி யிருக்கிறார். களம் பல கண்டிருக்கிறார். ஆனால், அவர் பொது வாழ்வில் நுழைந்தவுடன்  முதன் முதலாகக் கையில் ஏந்தியது சமூக நீதிதான். கி.வீரமணியின் பொது வாழ்வுப் பயணம் நெடியது. பிரச்சாரம், போராட்டம் என்று தொடர்ந்து வினையாற்றிக்கொண்டிருக்கிறார். பல்வேறு செயல்பாடுகள், ஏராளமான சாதனைகளை வீரமணி நிகழ்த்தியிருந்தாலும், சமூக நீதிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பே வரலாற்றில் போற்றத்தக்க பணியாக ஒளிவீசும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவாகும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கேடு விளைவிக்கின்ற 9000 ரூபாய் வருமான வரம்பாணையினை ஒழித்த பெருமை வீரமணியைச் சாரும். இது தமிழ்நாட்டு அளவில் நடைபெற்ற புரட்சி. மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு நல்கும் மண்டல் குழுப் பரிந்துரைகள் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்திட வீரமணி ஆற்றிய உழைப்பு 

கொஞ்ச நஞ்சம் அல்ல; 1980 முதல் 1994 வரை 14 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றிச் சுழன்றார்; குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்து வலியுறுத்தினார். மக்களிடம் பிரச்சாரம் செய்தார். 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தினார். வெற்றி பெற்றார். இது இந்திய அளவில் நடைபெற்ற மகத்தான புரட்சியாகும். 

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்த போது 31சி சட்டத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்து அதனை, மத்திய அரசுக்கு அனுப்பி குடியரசுத் தலைவரின் கையொப்பம் பெற்று, ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்த பெருமை வீரமணிக்கு உண்டு. கல்வி பயிலும் மாணவர்கள் படிக்கின்றபோது பாடப் புத்தகத்தில் வீரமணியின் முகமும், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறும்போது வாங்கும் பணத்தில் வீரமணியின் உருவமும் பதிந்திருப்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வார்கள்.

No comments:

Post a Comment