பிஜேபியின் 'தார்மீகம்' என்பது இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

பிஜேபியின் 'தார்மீகம்' என்பது இதுதான்!

தாதகாப்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியம். இவர் சேலத்தை மய்யமாகக் கொண்டு `ஜஸ்ட் வின்' எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல் எனத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆட்களைச் சேர்த்து ரூபாய் அய்நூறு கோடிக்கு மேலாக நிதி திரட்டி நிறுவனத்தை இயக்கி வந்திருக்கிறார். மேலும், ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம்தோறும் 20 ஆயிரம் 12 மாதங் களுக்குத் தருவதாகக் கூறி பொது மக்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்டியிருக்கிறார். இதை நம்பி பத்தாயிரத் துக்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, பணம் செலுத்தியவர்களுக்கு எந்தவிதத் தொகையும் கொடுக் காமல் ஏமாற்றிவந்திருக்கிறார். இதனை அடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில்  பாலசுப்பிரமணியன் பா.ஜ.க-வில் இணைந்துகொண்டார். அவருக்கு மாவட்ட அளவிலான பதவியும் கொடுக்கப்பட்டது. 
இன்னொரு செய்தி:
ரூ.1 இலட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக மோசடி: கிருஷ்ணன்கோவில் பா.ஜ.க. பிரமுகர் கைது (07.10.2022).
"ரூ.1 இலட்சம் கொடுத்தால் ஓராண்டில் ரூ.1 கோடி தருவதாகவும், ரூ.10 இலட்சம் கொடுத்தால் ரூ.10 கோடி தருவதாகவும் கூறி ரூ.20 இலட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் விருதுநகரில் கைது செய்யப் பட்டார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் முகமது தமீம்பேக் .வில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராம்பிரபு ராஜேந் திரனிடம் அறிமுகம் ஆகி உள்ளார்.
அவர், தன்னிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருந்ததாகவும், அதனை ஆஸ்திரேலிய இரிடியம் நிறுவனத்துக்கு இந்திய அரசு உதவியுடன் விற்றதாகவும், தன்னிடம் ரூ.1 இலட்சம் கொடுத்தால் ஓராண்டில் ரூ.1 கோடியும், ரூ.10 இலட்சம் கொடுத்தால் ரூ.10 கோடியும் தருவதாகக் கூறியுள்ளார்
இதை நம்பி கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் ரொக்கமாகவும், ரூ.5 இலட்சத்தை ராம்பிரபு ராஜேந்திரனின் வங்கிக் கணக்கிலும், அதைத் தொடர்ந்து ரொக்கமாக ரூ.10 லட்சமும் முகமது தமீம்பேக் கொடுத்துள்ளார். பின்னர், சில மாதங்கள் கழித்து முகமதுதமீம் பேக் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ராம்பிரபு ராஜேந்திரன் கால தாமதம் செய்து வந்துள்ளார்.
அதன்பின், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் பார்த்துப் பணத்தைத் திருப்பிக் கேட்க முயன்றபோது, தான் பா.ஜ.க.வில் முக்கிய பதவியில் இருப்பதாகவும் "நீ என்னிடம் கொடுத்த பணம் ஹவாலா மூலமாக மோசடி செய்து பெற்ற பணம்" என்றும், "உன்மீது டில்லி காவல் துறையிடம் புகார் கொடுப்பேன்" என்றும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் முகமது தமீம்பேக் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பண மோசடி வழக்குப் பதிந்து ராம்பிரபு ராஜேந்திரனை கைது செய்தனர். விசாரணையில் இவர் பா.ஜ.க.வில் முக்கிய புள்ளியாக இருப்பதால் இவரை நம்பி பலர் இலட்சக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்துள்ளது"
இன்னொரு செய்தியும் உண்டு.
ஒன்றிய அரசில் வேலை... மீனவரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி. பாஜக பிரமுகர் மீது புகார். (11.11.2022) 
"ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிக் சுமார் 6.70  லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா பிரிவு இணை அமைப் பாளர் மீது மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது."
இப்படிப் பல செய்திகள்!
பி.ஜே.பி. என்றால் கடவுள், மதம், சனாதனத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட தார்மீக ரீதியான குணாம்சத்தைக் கொண்டது என்று நீட்டி முழங்குகிறார்களே - அவர்களின் ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்தான் மேலே  எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஆதாரப் பூர்வமான தகவல்கள். தெரிந்து கொள்வீர் - மதவாதக் கூட்டத்தின் யோக்கியதையை!

No comments:

Post a Comment