திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்

சென்னை, டிச.12  திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்குத் தமிழ் நாடெங்கும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.

விவரம் வருமாறு:

சோழிங்கநல்லூர்

25.11.2022 அன்று மாலை சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்”ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு”வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்  செம்பாக்கம் காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன் தலைமை உரையில் ஜாதி ஒழிப்பு போராளிகளின் வீர வரலாற்றை எடுத்துரைத்தார்.

மாவட்ட செயலாளர் விஜய் உத்தமராஜ் வரவேற்புரையில் ஜாதி ஒழிப்பு போராளிகள் கொள்கை உறுதியுடன் போராட் டத்தில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறை சென்றனர் என்ற அந்த துயரம் நிறைந்த வரலாற்றை எடுத்துரைத்து ஜாதி ஒழிப்புத் போராளிகளால் மக்களுக்கு கிடைத்த பாதுகாப்பு களை எடுத்துக் கூறினார்.  மாவட்ட கழக துணைச் செயலாளர் வேலூர் பாண்டு, மாவட்ட ப.க. தலைவர் ஆனந்தன், மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.சி.ஜெயராமன், தாம்பரம் மாவட்ட கழக தலைவர் முத்தையன், மாவட்ட கழக அமைப்பாளர் குழ.செல்வராசு முன்னிலையேற்றனர்.

சி.அய்.டி.யு கட்சியின் நகர தலைவர் தோழர் அப்புனு, பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து மக்கள் மிக எச்சரிக்கையாக வரும் தேர்தல்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உரை ஆற்றினர்.

மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தோழர் எஸ்.கே. ஜாகீர் உசேன் தமது உரையில் பா.ஜ.க ஆட்சியில் இஸ்லாமியர்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்து வரும் 2024 ஆண்டு நடைபெறும் நாடாளு மன்ற தேர்தலில் மக்கள் விழிப்பாக இருந்து பா.ஜ.க கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று எடுத்துரைத்து ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் உரை நிகழ்த்தி உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து செம்பாக்கம் நகர திராவிட முன்னேற்றக் கழக 39 ஆவது வட்ட செயலாளர் உடன்பிறப்பு தனவந்தன், தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை மற்றும் ஜாதி ஒழிப்பு போராளிகளின் சிறப்புகளை எல்லாம் எடுத்துரைத்து மிக சிறப்பாக உரை ஆற்றினர்.

தொடர்ந்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் ஜாதி ஒழிப்பு போராளிகளின் தொண்டை நாம் மதித்து எப்படி மக்கள் போற்ற வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு ஏற்படும் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இந்த ஆட்சியை நம் மக்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து தாம்பரம் செயலாளர் கோ.நாத்திகன் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு நாம் இரண்டு நிமிடம் அமைதியை கடைபிடித்து அவர்கள் நினைவை போற்றுவோம் என்று கூறினார். அதனை தொடர்ந்து மக்கள் இரண்டு நிமிடம் அமைதியை கடைபிடித்து போராளிகளின் நினைவை போற்றினர். அதனை தொடர்ந்து ஜாதி ஒழிப்பு  கருத்துரை வழங்கி உரையாற்றினார்.

சிறப்புரை வழங்கிய கழக சொற்பொழிவாளர் தோழர் சே.மெ.மதிவதனி தொடர்ந்து ஒரு மணி நேரம் ஜாதி ஒழிப்பு போராளிகளின் வீர வரலாற்றை மிக துல்லியமாக எடுத் துரைத்து பொது மக்கள் சிந்திக்கும் வகையில் மிக நேர்த்தியாக ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கான வீர வணக்க நாள் செய்தி களை மக்களுக்கு ஏராளமாக எடுத்துக் கூறி பொதுக்கூட் டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வரலாற்றுச் செய்திகளை நிறைவு செய்தார். 

முடிவில் தோழர் தேவி சக்திவேல் நன்றியுரை ஆற்றினார். 

பொதுக்கூட்டத்தில் மு.நித்தியானந்தம், டி.வி.கதிரவன், தாம்பரம் சு.மோகன்ராஜ், கரசங்கால் ரெ.கதிர்வேல், மாடம் பாக்கம் அ.கருப்பையா, பெருங்களத்தூர் கோ.பழனிச்சாமி, மா.குணசேகரன், மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, கூடுவாஞ்சேரி மு.தினேஷ்குமார், பழைய வண்ணை ந.அரசு, செம்பாக்கம் வழக்குரைஞர் எஸ்.பிச்சை முத்து, செம்பாக்கம் சக்திவேல், பெரும்பாக்கம் மண்டேலா, திருவாரூர் அனந்தராஜ், வருண், பிரபு, கோபி கண்ணன், முத்து, பாலா, இன்பரசி மற்றும் சேஷாத்ரி ஆகியோர் மற்றும் பல கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கம்பம்

கம்பம் மாவட்ட திராவிட கழகத்தின் சார்பாக நடைபெற்ற ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் 28.11.2022 அன்று  கே.கே.பட்டியில் நடைபெற்றது. கூட்டத் திற்கு கே.கே.பட்டி நகரத் தலைவர் முருகன் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமிலா, மாவட்ட அமைப் பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட சார்பாக ஜாதி ஒழிப்பு மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 26. 11. 2022சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அரியலூர் அண்ணா சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை ஏற்க மாவட்ட. தொழி லாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து வரவேற்புரையாற் றினார்.

அரியலூர் நகர செயலாளர் கு. தங்கராசு, மண்டல செய லாளர் சு. மணிவண்ணன், மண்டல தலைவர் இரா. கோவிந்த ராஜன், மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில் குமார், பொதுக்குழு உறுப்பினர் ந.செல்லமுத்து, ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

தொடக்கத்தில் அரியலூர் பாடகர் அறிவுமழை கழகப் பாடல்களைப் பாடினார். மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றியபின்னர் கழக சொற்பொழிவாளர் யாழ்.திலீபன் ஜாதி ஒழிப்பு போராட்டம் குறித்தும், பெரியார் பெருந்தொண்டர்களின் போர்க்குணம் குறித்தும், இன்றைக்கும் ஜாதியின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் இரா. திலீபன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு அறிவன், மீன் சுருட்டி நகர தலைவர் ராஜா. அசோகன், மாவட்ட தொ.அ.செயலாளர் வெ.இளவரசன், ஆண்டிமடம் ஒன்றியதலைவர் இரா.தமிழரசன், இ.அ.செயலாளர் பாலமுருகன், ஆண்டிமடம்நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன் , ஒன்றிய செயலாளர் இராசா. செல்வக்குமார், அமைப்பாளர் சி.கருப்பசாமி, திருமானூர் ஒன்றிய தலைவர்க. சிற்றரசு, செயலாளர் பெ.கோபிநாதன், அமைப்பாளர் சு.சேகர், மறவனூர் மதியழகன், புலவர் அரங்க நாடன், நீ. பெரியார் செல்வன், குழுமூர் சுப்புராயன், வீராக்கன் செ.வெற்றிச்செல்வன், உ.வேலு, க. சத்யராஜ், உள்ளிட்ட ஏராளமான தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

 ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு சிறப்பு

முன்னதாக மாலை 5 மணியளவில் தத்தனூர் பொட்டக் கொல்லையில் வசிக்கும் வாழும் சட்ட எரிப்பு வீரர்கள் துரைக் கண்ணு, இராமசாமி ஆகியோருக்கு மாவட்ட தலைவர் விடுதலை . நீலமேகன் தலைமையில், தொழிலதிபர்கள் ராஜா. அசோகன், திலீபன் ஆகியோர் பயனாடைகள் அணிவித்து சிறப்பு செய்தனர். ஏராளமான தோழர்கள் பங்கேற்றது பெரியார் பெருந்தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் தோழர் களுக்கு பெருமிதத்தையும் ஏற்படுத்தியது.

மயிலாப்பூர் 

தென்சென்னை கழக மாவட்டம் மயிலை பகுதி சார்பில் மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் பாலம், மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்  28.11.2022, திங்கள், மாலை 6.00 மணி அளவில் பெரியார் யுவராஜ் தலைமையில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், கோ.வீ. ராகவன், ஈ.குமார், இரா. பிரபாகரன், ச.மகேந்திரன், ந.மணி துரை, க.விஜயராஜா, அப்துல்லா ஆகியோர் முன்னிலை யேற்றனர். மந்தைவெளி பொறுப்பாளர் இரா. மாரிமுத்து வரவேற்பு உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி (வழக்குரைஞர் அணி அமைப்பாளர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்.

முன்னதாக நாத்திகனின் - மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் மோகன்ராஜ், ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார், உடுமலை வடிவேலு, பன்னீர் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தின் முடிவில் மு.முத்து நன்றி உரையாற்றினார்.

திருவண்ணாமலை  - தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் 28.11.2022 அன்று நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்புடன் வீரவணக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட கழகப் பொறுப் பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். கழகச் சொற் பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் சிறப்புரை ஆற்றினார். 

தூத்துக்குடி 

தூத்துக்குடியில் 27.11.2022 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் கழகப் பொதுக்கூட்டத்தில் கழக வெளி யுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி உரையாற்றுகிறார். மாநில எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் ஆகியோர் உரையாற்றினார்கள். மேடை யில் மு.முனியசாமி - மாவட்டச் செயலாளர், இரா.ஆழ்வார்.

ஒசூர் 

கழக சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி தொடக்கவுரையாற்ற, கழக பேச்சாளர் அண்ணா சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் திராவிட தொழிலாளரணி மாவட்ட தலைவர் தி.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.வெற்றிசெல்வன், மகளிர் பாசறை செயலாளர் கிருபா, திராவிட சிட்டி மூமென்ட் அபி கவுடா, வழக்குரைஞர் ஆஃப்ரிடி, பிரபாகரன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மாணவர் கழக வாசு, விசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் 

 தலைமை: சி.தங்கராசு பெரம்பலூர் மாவட்ட தலைவர்.

வரவேற்பு: மு.விசயேந்திரன் பெரம்பலூர் மாவட்ட செய லாளர், சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.

செஞ்சி 

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக செஞ்சியில் 26.11.2022 அன்று ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் அ.செந்தில்வேலன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன், மண்டலச் செயலாளர் தா.இளம்பரிதி, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, மாவட்ட கழக செயலாளர் அரங்க.பரணிதரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன் முன்னிலை வகித்தனர். கழகப் பேச் சாளர்கள் மாங்காடு பெ.மணியரசன், த.சீ.இளந்திரையன் மற்றும் ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஆ.கு.மணி, இ.தே.காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பழங்குடி மக்கள் முன்னணித் தலைவர் சுடரொளி சுந்தரம், எஸ்டிபிஅய் செஞ்சி தொகுதி செயலாளர் எஸ்.எம்.அபுபக்கர், அம்பேத்கர் மக்கள் கட்சித் தலைவர் சு.மழைமேனி பாண்டியன், பொது வுடைமை கட்சியின் தமிழ்நாடு விவசாய அணியின் மா.து.தலைவர் கோ.மாதவன், துரும்பர் விடுதலை இயக்க இணை அமைப்பாளர் அருள் சகோதரி அல்போன்சா, பெரியார் சாக்ரடீசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மகிழ்நன் ஆகியோர் கலந்துகொண்டு ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினர். இறுதியாக விழுப்புரம் மண்டல இளைஞரணிச் செயலாளர் த.பகவான்தாஸ் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் மற்றும் தோழமை கட்சித் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

குடந்தை  

குடந்தை மீன் மார்க்கெட்டில் 28.11.2022 திங்கள் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றிய பிரதிநிதி பவுண்ட்ரீகபுரம் முருகேசன் தலைமை வகித்தார்.  மாணவர் கழக  துணை செயலாளர்  அருண்குமார் வரவேற்புரை யாற்றினார். சிறை சென்ற ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர்கள் திருநாகேஸ்வரம் மொட்டையன் மற்றும் திருப்பனந்தாள் மணிக்குடி கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலையேற்றனர். அவர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மற்றும் கழக பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் நிம்மதி, தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, செயலாளர் இரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாநகர  மாவட்ட மகளிரணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி மாவட்ட மாணவர் கழக தலைவர் தீனதயாளன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் அஜிதன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி, குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ்,ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,ஒன்றிய அமைப்பாளர் அசூர் செல்வம், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர்,ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் மோகன்,  வலங்கைமான் ஒன்றிய செயலாளர் பவானி சங்கர், பாபநாசம் நகரத் தலைவர் இளங்கோவன், பாபநாசம் நகர செயலாளர்  வீரமணி, ஒன்றிய இளைஞரணி தலைவர் மனோகரன், கல்யாணபுரம் காமராஜ், பட்டீஸ்வரம் நகர தலைவர் இளவழகன், பகுத்தறிவாளர் கழகம் செல்வராசன், இராவணன், பேரா. பிரபாகரன், பேரா. சேதுராமன், குணா, கவிஞர் செல்வ சேதுராமன், காங்கிரஸ் பொறுப்பாளர் குட்டி சாமிநாதன் சுபா ஆகியோர் பங் கேற்றனர். குழந்தை மாநகர மகளிர் அணி செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment