சண்டிகர், டிச. 16- அரியானா மாநிலம் பரீதாபாத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா உலா. இவர் பரீதாபாத் காவல் நிலை யத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த ஷம்பு நாத் என்பவர், தனது எருமை மாடு காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அதை கண்டுபிடித்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை மகேந்திரா விடம், ஷம்புநாத் லஞ்சமாக கொடுத்தார். அத்துடன் லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினரிடம் ஷம்பு நாத் புகார் கொடுத்தார்.
காவல்துறையினரின் திட்டப்படி மீதி பணத்தை மகேந்திராவிடம் கொடுக்க ஷம்புநாத் சென்றார். அப்போது மகேந்திராவை, லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். உடனே மகேந்திரா உலா, அந்தப் பணத்தை தனது வாயில் போட்டு விழுங்க முயன்றார். ஆனால் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், மகேந்திரா உலாவின் வாயில் கைவிட்டு அந்தப் பணத்தை விழுங்க விடாமல் செய்தனர். மேலும் இந்த நிகழ்வு முழு வதையும் காட்சிப்பதிவாகப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகேந்திரா உலா கைது செய்யப்பட்டார். லஞ்சப் பணத்தை அவர் விழுங்க முயன்ற காட்சிப்பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment