புதுடில்லி, டிச 11 இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி யுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (மிளிகி) முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பி.டி. உஷா. இந்த சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற் றில் பன்னாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக பதவியேற்பது இதுவே முதல் முறை.
இந்திய அணி சார்பில் 1934 ஆம் ஆண்டு பன்னாட்டு கிரிக்கெட் டெஸ்ட் போட் டியில் பங்கேற்ற மகாராஜா யுதவிந்தர சிங் 1938 முதல் 1960 வரை இச்சங்கத்தின் தலைவராக இருந்தார். இவரை அடுத்து பன்னாட்டு போட்டிகளில் இந் தியா சார்பில் பங்கேற்ற ஒருவர் தலைவர் பதவி ஏற்பது இது இரண்டாவது முறை என்ற பெருமையும் பி.டி. உஷா-வை சேரும். 58 வயதான பி.டி. உஷா இந் தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் தடகள வீராங்கனை என்பதும் ஆசிய போட் டிகளில் தங்கம் வென் றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவருக்கு சமீபத் தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக அரசு வழங்கி யது. ஒலிம் பிக் சங்கத்திற்கு முறையாக தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை நியமித்து வருவது குறித்து பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு 2022 டிசம்பருக்குள் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவேண்டும் என்று கெடு விதித்திருந்தது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் மேற்பார்வை யில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment