மதுரை, டிச.23 மதுரை மாநகர், புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை கிரைம் பிராஞ்ச் அருகில் உள்ள தமிழக எண்ணெய்ப் பலகாரக் கடை முன் நவம்பர் 26 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடை பெற்றது.
தென் மாவட்ட பிரச்சாரக் குழுத்தலைவர் தே.எடிசன்ராசா நிகழ்வுக்கு தலைமை ஏற்றார். மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அனைவரையும் வரவேற்றார். கழக மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், காப்பாளர் சே.முனியசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மாநகர் கழகத் தலைவர் அ.முருகானந்தம், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.வா.நேரு ஆகியோர் தொடக்க உரையாற்றினர். கழக சொற் பொழிவாளர் என்னாரெசு பிராட்லா சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது சிறப்பு உரையில் 1957 இல் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம், ஜாதி என்பது எவ்வளவு கொடுமை யானது, உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களை ஜாதி என்னும் வருண அமைப்பு முறை எவ்வளவு கேவலப்படுத்துகிறது,
ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகத்தின் வீரம் செறிந்த ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிறைபட்டவர்கள், சிறையினை இன்முகமாக ஏற்றுக்கொண்ட சிறுவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அந்தப் போராட்டத்தினை மிக விளக்கமாக எடுத்துரையாற்றினார்.
இந்த வீரவணக்க நிகழ்வில் மதிமுக இணைப் பொதுச் செயலாளர் எஸ்.மகபூப்ஜான், கழக மண்டல தலைவர்
கா.சிவகுருநாதன் ஆகியோரும் உரையாற்றினர். நிகழ்வில் மாநில வழக்குரைஞர் அணி துணைச்செயலாளர் ந,கணேசன், கழக மண்டல செயலாளர் நா.முருகேசன், மாவட்ட அமைப்பாளர் இரா,திருப்பதி, புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.மன்னர்மன்னன், மாவட்ட அமைப்பாளர் ச.பால்ராஜ், புறநகர் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் பா.முத்துக்கருப்பன், ரோ.கணேசன், து.சந்திரன், ஜெ.பாலா, க.நாகராணி, மாநகர் மாவட்ட துணைத்தலைவர் பொ.பவுன் ராஜ், இளைஞர் அணி தலைவர் க.சிவா, செயலாளர் பேக்கரி கண்ணன், பு.கணேசன், அ.அல்லிராணி, க.பெரியசாமி, பெ.பாக்கியலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் ராக்கு தங்கம், இரா.கலைச்செல்வி, சோ.சுப்பையா, இரா.இளங்கோ, ஆட்டோ செல்வம், வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி, புதூர் பாக்கியம், அண்ணா நகர் தனுஷ்கோடி, செந்தில்குமார், கு,மாரிமுத்து, மோதிலால், க.மணிராஜ், பெரி.காளியப்பன், இரா.அழகுபாண்டி, பெரியார் பிஞ்சு நன்னன் அழகுபாண்டி, புத்தகத்தூதன் சடகோபன், விராட்டிபத்து நல்லதம்பி,
அ.இராஜா, கோரா, செல்லூர் இராஜேந்திரன், கோ.கு.கணேசன், தனசேகரன், க.பிச்சைப்பாண்டி, சண்முகசுந்தரம், நடுக் கோட்டை பிரகாஷ் உள்ளிட்ட பல தோழர்களும் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மாவட்ட துணைச்செயலாளர் இரா.லீ.சுரேஷ் நன்றியுரை யாற்றினார்.
No comments:
Post a Comment