கல்லக்குறிச்சி, டிச. 14- கல்லக்குறிச்சி யில் 11.12.2022 அன்று மாலை 5 மணிக்கு சேலம் முதன்மைச் சாலையில், அமைந்துள்ள எஸ். எம் கோபுர கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பகுத்த றிவு இலக்கிய மன்றம், 117ஆம் தொடர் சொற்பொழிவு மற்றும் கழக மேனாள் பொருளாளர் கோ.சாமிதுரை, 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். பகுத்தறிவு இலக்கிய மன்றத்தின் தலைவரும் மேனாள் மாவட்ட கல்வி அலு வலருமான புலவர் பெ.சயராமன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழக அமைப்பாளர் எடுத்தவாய்நத்தம் த.பெரிய சாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பழனியம்மாள் கூத் தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், கல்லை நகர கழக தலைவர் இரா.முத்துசாமி ஆகியோர் முன் னிலை வகித்து, மேனாள் பொரு ளாளர், சுயமரியாதைச் சுட ரொளி கோ.சாமிதுரை கல்வி அறிவு அறக்கட்டளை செய்து வரும் பணிகளைப் பற்றி உரை யாற்றினர்..
தமிழ் விரிவுரையாளர் தேவ நேய சித்திரைச்செல்வி குறள் விளக்கம் தந்தார். கோ.சாமி துரை கல்வி அறிவு அறக்கட் டளை 2014இல் ஏற்படுத்தப்பட்டு அதனை திறம்பட மருத்துவர் கோ.சா குமாரும், அவர்களின் இளவல் கோ.சா.பாஸ்கரும் திறம்பட நடத்தி வருகிறார்கள். இவ்வறக்கட்டளை சார்பில் பெரியார்-சாமிதுரை சாதனை யாளர் விருதும், வீரமணி-சாமி துரை சாதனையாளர் விருதும் ஒவ்வொரு ஆண்டும் களப்பணி களை சிறப்பாக செய்து வரும் இரண்டு கழகத் தோழர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறும் தோழர் களுக்கு பெரியார்-வீரமணி-சாமி துரை இலச்சினை பொருத்தப் பட்ட கேடயமும், பணமுடிப்பு ரூபாய் 5000-(ரூபாய் அய்ந்தாயிர மும்) வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 2022, பெரியார்-சாமி துரை சாதனையாளர் விருது விழுப்புரம் மண்டல மேனாள் செயலாளரும், தற்போது சோழிங்க நல்லூர் மாவட்ட அமைப்பா ளருமான குழ.செல்வராசுவுக் கும், வீரமணி-சாமிதுரை சாத னையாளர் விருது கல்லக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், ச.சுந்தரராஜனுக்கும் வழங்கப் பட்டது. விருது பெற்றவர்களை மாநில மருத்துவரணி செயலா ளர் கோ.சா.குமாரும், கல்லக் குறிச்சி தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகச் செயலாளரும் வழக்குரைஞருமான, சி.வெங்க டாசலமும் பாராட்டி பேசினர்.
விழுப்புரம் மண்டல கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மேனாள் பொருளாளர் கோ.சாமிதுரை கல்வி அறக்கட்ட ளைப் பற்றி உரையாற்றினார். அவர் தமது உரையில், "கோ.சாமிதுரை” தமிழர் தலைவர் ஆசிரியரைவிட ஏழு நாட்கள் மூத்தவர். இருப்பினும், தமிழர் தலைவரை தனக்கும் தலைவராக கொண்டு செயலாற்றியவர்; தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு வலதுக்கரம் போல் இருந்து செயல்பட்டவர்; கழகப் பொருளாளராக பதவி வகித்து, ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைய பாடுபட்டவர். இன்று சுயமரியாதை பிரச்சார நிறு வனம் மூலம் 44க்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், கல்வி சார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
கல்லக்குறிச்சி மாவட்டத்தி லும், அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களிலும், பல ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் நம்முடைய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த வர்களே ஆவார்கள். இதற் கெல்லாம் மூல காரணம் அய்யா சாமிதுரை என்றே கூறலாம்.
தமிழர் தலைவருக்கு, அவரது ஓய்வறியா பெரியார் பணி முடிக்கும் பணிக்கு, எடைக்கு எடை தங்கம் வழங்கிய நிகழ்வு, நம்முடைய தமிழ்நாட்டில் தான் நிகழ்ந்தது. உலகில் எந்த ஒரு தலைவருக்கும் எந்த ஒரு நாட்டிலும் இதுவரை இது போன்ற அதிசய நிகழ்வு நடந்த தில்லை. இத்தகைய அரிய நிகழ் வுக்கும் அய்யா சாமிதுரை அவர் களே காரணமாவார். அவர், நிறைய வருமானம் பெறக்கூடிய வழக்குரைஞர் தொழிலை விட்டு விட்டு, தமிழர் தலைவருடன் இறுதிவரை திராவிடர் கழகத் திற்காகவே உழைத்தார்.
-அவர் வழியை பின்பற்றி நாங்கள் கழகப் பணிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் இடும் பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கோ.சாமி துரை கல்வி அறக்கட்டளை சார்பாக இவ்விருதுகள் வழங் கப்பட்டிருக்கிறது” எனக் கூறி முடித்தார்.
விருது பெற்றவர்களை பாராட்டி, கல்லை தமிழ்ச்சங்க செயலாளர் தமிழ்ச் செம்மல் செ.வ.மதிவாணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் சி.முருகன், சங்கராபுரம் ஒன்றிய தலைவர் பெ.பால சண்முகம், சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.இலட்சுமிபதி உள்பட பலர் பாராட்டி பேசினார்கள். விருது பெற்ற குழ.செல்வராசு ச.சுந்தர ராஜன் ஏற்புரை ஆற்றினர்.
இவ்விழாவில் கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.முருகேசன், ரிஷி வந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் அர.சண்முகம், சங்கராபுரம் நகர கழக செயலாளர் கபூர், கல்லக் குறிச்சி நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.சாமிதுரை, திராவிட மாணவர் கழக காரனுர் கிளைக் கழகத் தலைவர் மணியமுதன், கல்லக்குறிச்சி நகர திராவிட மாணவர் கழக அமைப் பாளர் மாலிக், பெரியசிறுவத்தூர் பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளர் துரைசாமி, மூரார்பாளையம் செல்வம், பாலு, ரகோத்தமன், சித்ரா, சிவஞானபிரகாசம், மீனாட்சி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன், விருகாவூர் தமிழ்ச் சங்கத் தலை வர் சண்முகம் பிச்சைப்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கல்லக்குறிச்சி நகர கழக செயலாளர் நா.பெரியார் நன்றி கூற கூட்டம் இனிதாக முடிந்தது.விழா முடி வில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் கோ.சாமிதுரை அறக் கட்டளை மூலம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment