பார்ப்பனக் கொள்ளைக்கா?
* இந்துக் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவேண்டும்.
- சு.சாமி
>> ஏன்? பார்ப்பனக் கொள்ளைக்கா?
கிடைத்தது யாருக்கு?
* சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 445 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றனர்.
>> இதில் எத்தனைப் பேருக்கு பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு இடம் கிடைத்தது?
ஆழ்ந்த பரிசீலனையோ!
* ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - பரிசீல னையில் உள்ளதாம்.
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
>> ‘ஒரு மகாமகம்' காலம் ஆகுமோ!
எத்தனை உயிர்களைக் குடிக்கத் திட்டம்?
* அணுக்கழிவு மய்யம் அமைக்க மேலும்
4 ஆண்டுகள் அவகாசம் தேவை - உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்.
>> அதுவரை எத்தனை உயிர்களைக் குடிக்கத் திட்டம்?
இதெல்லாம் வெறும் தூசு!
* நீதிபதிகள் பதவிக்கு உச்சநீதிமன்ற கொலீஜி யத்தின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு.
>> ஹிட்லரிசத்தின் முனையைத் தொட இன்னும் கொஞ்ச தூரம்தான்.
கீதையைப் படித்துள்ளாரா
குடியரசுத் தலைவர்?
* பன்னாட்டு கீதைத் திருவிழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
>> குடியரசுத் தலைவர் பெண்ணாக இருப்பதால் கீதையின் சுலோகத்தை எடுத்துக் கூற முடியவில்லை!
No comments:
Post a Comment