சென்னை, டிச. 9- அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் களில் ஒருவராக இருந்த மேனாள் சட்டமன்ற உறுப் பினர் கோவை செல்வ ராஜ், அதிமுக கட்சி பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியிலிருந்து விலகினார். இதன்பிறகு டிச.7 அன்று சென்னை அண்ணா அறிவாலயத் தில் திமுக தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத் தில் அவர் அளித்த பேட் டியில்,"நான்கரை ஆண்டு இபிஎஸ் ஆட்சியில் தமிழ் நாடு சீரழிந்துவிட்டது. அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன் னிப்பு கேட்டுக்கொள்கி றேன். 14 வயதில் உதய சூரியன் சின்னத்தில் வாக் குக் கேட்ட நான் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந் துள்ளேன்.தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி திமுக வில் இணைந்துள்ளேன். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதலமைச்சர் ஒளியேற்றி வைத்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் முன் னிலையில் செயல்பட வந்துள்ளேன்" இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment