இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் இன்று பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் இன்று பதவியேற்பு


சிம்லா, டிச 11- இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இது வரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 இடங்க ளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 

அங்கு 1985ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறாமல் தொடருகிறது. குஜராத் தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட் சியைப் பறிகொடுத்தது. 

இங்கு 5 ஆண்டுகளுக் குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு வுக்கு தலைமை தாங்கி நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதலமைச்ச ராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தவுன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதல மைச்சராக கட்சித் தலைமை நேற்று (10.12.2022) அறிவித்தது. இந்நிலையில், சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற கூட் டத்தில் சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

அதன் படி இன்று (11.12.2022) காலை 11 மணிக்கு சுக் விந்தர் சிங் சுகு முதலமைச் சராக பதவியேற்றார்


No comments:

Post a Comment