"கி.வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போ தாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங் களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது" - கல்கி
***
"மனதில் பட்டதைத் தயக்கமில்லாமல் பேசுபவர் கி.வீரமணி. இதன் அர்த்தம் கண்ட தையும் பேசுபவர் அவர் என்பதல்ல. அவர் வெளியிடும் கருத்துகளுக்குப் பின்னால் அவரது ஆழ்ந்த சிந்தனை இருக்கும். தன்னுடைய கருத்துகளில் பிடிவாதமாக இருக்கும் அதே நேரத்தில் அவற்றை பகிரங்கமாக விவாதிப்பதற்கும் தயங்காதவர் அவர்" - தினமணி.
***
"எதையும் ஆதாரத்தோடு பேசக் கூடி யவர். வரலாற்றுச் செய்திகளை மனத்திலேயே குறித்து வைத்திருக்கும் ஆற்றலாளர் என்று எதிர் கருத்துடையோர் கூட ஏற்றுக் கொள்ளக் கூடியவர் வீரமணி" 'இனி' - இதழ் "எவ்வளவு குறுக்குக் கேள்விகள் கேட்டாலும் பொறுமை யாகப் பதில் கூறு கின்றார். இத்தனைக்கும் இவர் கருத்துகளும், என் கருத்துகளும் அநேகமாக வேறுபட்டே நிற்கின்றன. இப்பேட்டியில் நான், வீரமணி யிடம் கேட்ட கேள்விகள் பலவகையானவை. சில கேள்விகள்- என் கருத்தைப் பிரதி பலிப்பவை; வேறு சில கேள்விகள் பொதுவாக திராவிடர் கழகக் கொள்கை களுக்கு எதிராக பலரால் நினைக்கப்படும் கருத்துகள்; மேலும் சில கேள்விகள் - எதிர் வாதமாக எழுபவை. இப்படி கேள்விகள் அமைந்ததால் இப்பேட்டி பல இடங்களில் ஒரு விவாதமாகவே மாறியும் கூட அவர் தனது பொறுமையை இழக்காமல் பதில் கூறிய விதம் என்னைக் கவர்ந்தது. பேட்டியைப் பிரசுரிக்கும் முன்பாக அவ ருடைய நற்பண்பை மனதாரப் பாராட்டுவது என் கடமை" - துக்ளக் "
***
"திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றவர் பேசும்போது குறுக்கே பேசமாட்டார். கவனமாக, சில சமயம் தன் கைகளைக் கட்டிக்கொண்டு கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர்களைக் கூட 'வாங்க போங்க' என்று தான் சொல்லுவார்" - ஆனந்த விகடன்
No comments:
Post a Comment