சென்னை, டிச. 9- இன்று (9-12-2022), தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி அவர் களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் மேனாள் தலைவருமான திருமதி. சோனியா காந்தி அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சி யான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன். இவ் வாறு முதலமைச்சர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment