முருகன்குடி, டிச. 30- முருகன் குடியில் தந்தை பெரியார் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கழகத் தோழர் பச்சைமுத்து அவர்களின் தந்தை இரா. அழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுநாள் இணைந்த கருத்தரங்கம்.
தந்தை பெரியார் 49 ஆம் ஆண்டு மற்றும் முரு கன்குடி இராம. அழகன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்த ரங்கம் 24.12.2022 அன்று மாலை 5 மணிக்கு முரு கன் குடியில் நடைபெற்றது.
விடுதலை வாசகர் வட்ட தலைவர் தா.கோ. சம்பந்தம் தலைமை தாங் கினார். செந்துறை ஒன் றிய திமுக மேனாள் செயலாளர் மு.ஞானமூர்த்தி “ஆர். எஸ். எஸ். ஓர் அபா யம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
பெண்ணாடம் நகர கழக தலைவர் ந.சுப்பிர மணியன் வரவேற்புரை ஆற்றினார். கழக மாவட் டத் தலைவர் அ.இளங் கோவன், க.முருகன், முன்னிலை வகித்தனர்.
கழக மாநில இளைஞ ரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் உண்ணற்க கள்ளை என்ற தலைப்பில், உலகத் திருக்குறள் கூட் டமைப்பு மாவட்ட தலை வர் முத்து. செயராமன், பெரியாரின் முதன்மை லட்சியம் என்ற தலைப் பில் மு. பழனிவேல் ஆசிரி யர், வாழ்வியல் சிந்தனை என்ற தலைப்பில் கவிஞர் பூவராகவன், ம.மணிமா றன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.
திராவிடர் கழக முன் னோடி முருகன்குடி அ. பச்சைமுத்து இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை திராவி டர் கழகமும், திருக்குறள் மய்யமும், உலக திருக் குறள் கூட்டமைப்பும், சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தார்கள்.
No comments:
Post a Comment