செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

செய்திச் சுருக்கம்

புதிய இணைப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பக்கத்திற்கு செல்ல நேரடி லிங்கை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி Bit.ly/linkyouraadhar என்ற இணைய தளத்தில் ஆதாரை இணைக்க மின்சாரத் துறையால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டவட்டம்

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என நாமக்கல்லில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்.

வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்.

பணி ஆணை

நகர ஊரமைப்பு இயக்கத்தில் 27 உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

புத்தாக்கம்

தமிழ்நாடு மின்னணு நிறுவனத் தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக் கம் குறித்த ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு அடுத்த ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

அபாயம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 0.35 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முகாம்

கனமழை பெய்தால் தமிழ்நாடு முழுவதும் அதிகளவு மருத்துவ முகாம்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக, இன்று முதல் 10ஆம் தேதி வரையிலான 3 நாள்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி களப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment