தமிழ்நாட்டில் 35ஆவது நபராக பொள்ளாச்சி இளைஞர் தற்கொலை
பொள்ளாச்சி,டிச.10- ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் அப்பாவி மக்களின் பொருளாதாரம் சுரண் டப்பட்டு வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் பொருளா தார இழப்புக்கு உள்ளாகி, கடனாளியாகி முடிவில் தங்களின் இன்னுயிரை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையை தமிழ்நாட்டிலிருந்து அறவே ஒழிக்கும் சட்டத் துக்கான மசோதா தமிழ் நாடு சட்டமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டு ஆளுநரின் ஒப்புத லுக்கு அனுப்பப்பட்டும், மக்கள் நலனில் கிஞ்சித் தும் அக்கறை இல்லாமல், அலட்சியப்போக்குடன் மட்டுமல்லாமல், ஜன நாயகத்துக்கே அறை கூவல் விடுபவராக தமிழ் நாட்டின் ஆளுநர் இருந்து வருகிறார்.
கடந்த மாதம் 27ஆம் தேதியோடு அச்சட்ட மசோதா காலாவதியா கும் நிலை ஏற்பட்டது. பல்வேறு அமைப்புகள் ஆளுநரின் சட்டவிரோத போக்கைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், அரச மைப்பின்படி செயல் படாத ஆளுநருக்கு எதி ராக நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளி நடப்பு செய்தனர்.
இந்நிலையில், பொள் ளாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூதாட் டத்தில் பணத்தை இழந்த காரணத்தால் தற் கொலை செய்து கொண் டார்.
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு மேட்டுப்பாளையம் பகு தியைச் சேர்ந்த சல்மான் (வயது 22) ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் வெகு வாக பணத்தை இழந்து, கடனாளியாகி விட்டார்.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த தன்னுடைய வீட் டிலேயே சல்மான் தூக்கு போட்டுக்கொண்டு தற் கொலை செய்துகொண் டார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத் துக்கு சென்று சல்மானின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு பொள் ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
No comments:
Post a Comment