தேர்வு
இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவிப்பு.
ஒத்திவைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வனசார் நிலை பணியில் அடங்கிய வனத் தொழில் பழகுநர் (குரூப் 6) பதவி நியமனத்திற்காக நேற்று (10.12.2022) நடைபெற இருந்த தேர்வு மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புது உணவு
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் புதிதாக உணவு பட்டியலை சேர்க்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தகவல்.
சீரானது
மாண்டஸ் புயலின் அதிவேக சூறாவளிக் காற்றால் தடைப்பட்ட மின்சாரம் சீரானது. வழக்கம்போல் சென்னையில் 2178 மெ.வாட் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்ததாக மின்சாரத் துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி தகவல்.
உறுதி
சென்னை மெரினாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பாதை, வலலுநர் குழு வைத்து ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே திறக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.
மருந்துகள்
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை இன்றைக்கு நிவாரண மய்யங்களுக்கு பொதுமக்கள் வந்தால் அவர் களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதற்கு மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
பரிசீலிக்க...
போக்சோ சட்டத்தில் வயது வரம்பு தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார்.
எச்சரிக்கை
காலநிலை மாற்றம் கதவுகளைத் தட்டுகிறது. ஏழை நாடுகளில் உள்ள மக்கள் சுற்றுச்சூழலின் சீரழிவுக்கு அதிக விலையை கொடுக்கப் போகிறார்கள் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment