"சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு தமிழ்நாடு அரசு கைகொடுக்கும்" கம்பீரமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

"சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு தமிழ்நாடு அரசு கைகொடுக்கும்" கம்பீரமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

சென்னை,டிச.22- மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மாணவர்களுக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்திலிருந்து வழங்கி வந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை திடீரென்று இந்த ஆண்டில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது.

 அநீதியான இந்த முடிவை அனைத்து மதச்சார்பற்ற கட்சி களும் கண்டித்தன. இந்த முடிவை கண்டித்து தமிழ்நாட்டின் முதல மைச்சர் 7.12.2022அன்று பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழு தினார். நிறுத்தப்பட்ட கல்வி உத வித் தொகையை மீண்டும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரினார்.

ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்கின்ற சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முற்பட்ட ஜாதிகளில் குறைந்த வருவாய்ப் பிரிவினர் என்று ஆண்டு வரு மானம் 7 லட்சம் உள்ளவர்களுக்கே 10 விழுக் காடு இட ஒதுக்கீட்டை தந்த ஒன்றிய அரசு சிறு பான்மை சமுதாயங்களில் கல்வியில் மிகவும் பின் தங்கி இருக்கின்ற சிறு பான்மைச் சமுதாய மாணவர்கள் பெற்று வந்த இந்த கல்வி உதவி தொகையை திடீ ரென நிறுத்தி, அதில் அதன் வன்மமும் வெறுப்பும் வெளிப்பட்டதாகவே அறியமுடி கிறது .

2021-_2022ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 559 மாணவர்களுக்கு ரூ.86.76 கோடி  உதவித்தொகை வழங்கப் பட்டது. ஒன்றிய அரசு திடீரென இந்த உதவி தொகையை நிறுத் தியது. சிறுபான்மை சமுதா யங்களைச் சேர்ந்த மாணவர் களின் எதிர்காலத்தை இருளாக் கும் செயலாக இது இருந்தது. அந்த ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை மிகப் பெரிய ஊக்க மாகவும், பள்ளிக்கல்வியை எழுதி முடிப்பதற்கு உதவும் சாதனமாகவும் உதவியது.

இந்நிலையில் ஒன்றிய அரசு  நிறுத்தி வைத்துவிட்ட உதவித் தொகையை உடனே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன் றிய அரசு ஒரு வேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறித்தவ நல் லெண்ண இயக்கம் நடத் திய அன்பின் கிறிஸ்மஸ் பெரு விழாவில் ஆற்றிய உரையின் போது இனிப் பான அறிவிப்பை வழங் கியமைக்காக தமிழ் நாடு முதலமைச்சருக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின் றோம் .

சமூகநீதியை வீழ்த்துகின்ற ஒரு வழியே கல்வியை பறிப்பது ஆகும். சமூக நீதியை உறுதிப்படுத்துவ தற்கான உன்னத வழி கல்வியை இளைய தலைமுறைக்குக் கொடுப் பது ஆகும்.

தமிழ்நாடு சமூகநீதி மாநிலம். இளைய தலைமுறை கல்வியில் சிறந்து விளங்கினால் தான் மதவெறி பாசிசம் அகன்ற மனித நேயம் மிகுந்த தமிழ் நாடு அமையும் என்பதை உணர்ந்து எளியோரின் கல்விக்காக கை கொடுத்து இருக் கின்ற தமிழக முதலமைச்சருக்கு இதயங்கனிந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா குறிப்பிட் டுள்ளார்.

No comments:

Post a Comment