தஞ்சை நகர மேனாள் செயலாளர் சு.முருகேசன் முதலாமாண்டு நினைவுநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

தஞ்சை நகர மேனாள் செயலாளர் சு.முருகேசன் முதலாமாண்டு நினைவுநாள்

 


தஞ்சை, டிச. 11- டிசம்பர்- 4ஆம்- தேதி  தஞ்சை மேனாள் நகர செயலாளர் சு.முருகேசன் முதலாமாண்டு நினைவு நாளன்று அவரது இல்லத்தில் கழகப் பொறுப்பா ளர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

டிசம்பர்- 4ஆம் - தேதி  தஞ்சை மேனாள் நகர செயலாளர் சு.முருகேசன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் சுயமரியாதை சுடரொளி சு.முருகேசன் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுசெயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ப.க.துணை தலைவர் கோபு.பழனிவேல், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநில மாணவர் கழக அமைப்பா ளர் இரா.செந்தூரபாண்டியன், கரந்தை பகுதி செய லாளர் தனபால், மாநகர இளைஞரணி துணை தலை வர் அ.பெரியார் செல்லம், மகளிரணி தோழர் ஜெக தாராணி, பெரியார் பிஞ்சு ஜெ.ஜெ.காவியா, இளைஞ ரணி தோழர் அ.சாக்ரடிஷ் மற்றும் கழக பொறுப்பா ளர்கள் கலந்துகொண்டடு மரி யாதை செலுத்தினர். சு.முருகேசன் வாழ்விணையர் மு.ஜெயலெட்சுமி, மகன் மு.சிந்தனைசெல்வன்,  குடும்பத்தினர் உடனிருந்தனர்.




No comments:

Post a Comment