குஜராத்தை தவிர்த்து அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. படுதோல்வி தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

குஜராத்தை தவிர்த்து அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. படுதோல்வி தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர்?

புதுடில்லி, டிச 9- குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தது சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது. 

  டில்லி மாநகராட்சி, குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலத் தேர் தல், 6 மாநில சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதி தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத்தை தவிர்த்து அனைத்து இடங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்தது, இடைத்தேர்தல்களில் பாஜக வச மிருந்த தொகுதிகளையும் காங் கிரஸ் கைப்பற்றி உள்ளது., 

குஜராத்தில் 182 தொகுதி களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு களை எண்ணும் பணி 37 வாக்கு மய்யங்களில் நடைபெற்றது. 

அதே போல் இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12 ஆம் தேதி 62 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையும் 8 ஆம் தேதி நடைபெற்றது. 

  தேர்தல் ஆணையம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் தேதிகளை ஒரே நேரத்தில் அறிவிக்காமல் முதலில் இமாச் சலப் பிரதேச தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு பின்னர் குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதியை அறிவிக்காமல் நிறுத்திவைத்தது, 

 இதனால் மோடி குஜராத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிவித்தார். அதே போல் அதிக எண்ணிக்கையிலான பொதுக்கூட்டங்கள் மற்றும் மக் கள் சந்திப்புகளை நடத்தினார். 

 புதிய அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை எல்லாம் மோடி நேரில் வந்து அள்ளிவீசிய பிறகு குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது, இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சியினரும் அதிருப்தி யைத் தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது, இதில் குஜராத்தில்  பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலை யில் 157 இடங்களை பெற்று  பாஜக வெற்றி பெற்றது.

 குஜராத் தேர்தலின் போது பாஜகவினர் பல்வேறு மோசடி களை செய்ததாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் ஒன் றுமே சொல்லாமல் இருந்தது. 

 குறிப்பாக தெற்கு குஜராத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் யாரையுமே வாக்குப்பதிவு கருவிக்கு அருகில் கூட செல்ல விடாமல் வாக்குச்சாவடி பணியா ளர்களில் ஒருவரே வாக்காளர் களுக்கு கையில் மை வைத்த பிறகு அவர்களை அப்படியே அனுப்பி விட்டு தானே சென்று தொடர்ந்து பட்டனை அழுத்திவிட்டு வரும் காட்சிப் பதிவு ஒன்று சமூக வலை தளங்களில் பரவியது. இந்தக் காணொளி தொடர்பாக இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை,  இந்த நிலையில் குஜராத் தேர்தல் முடிவுகள் தொடர் பாக மோடி தேர்தல் ஆணையத் திற்கு நன்றி தெரிவித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   குஜராத்தை தவிர மாற்ற இடங்களில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து எந்த ஊடக மும் கருத்து தெரி விக்கவில்லை.

No comments:

Post a Comment