தந்தை பெரியார் அரங்கம் திறப்பு - அறிவியல் கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

தந்தை பெரியார் அரங்கம் திறப்பு - அறிவியல் கண்காட்சி

குடியாத்தம், டிச. 14- “மதம் மனிதனை மிருகமாக்கும் - ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்” என்ற வரிகளுக்கு  சொந்தக்காரரான   பகுத்தறிவு பகலவன், தென்னாட் டின்  பெர்னாட்ஷா என அன்பு டன் அழைக்கப்படும் தந்தை பெரியார் அரங்கம் திறப்பு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி   குடி யாத்தம் புவனேஸ்வரிபேட்டை, பகுதியில் உள்ள லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவிற்கு பள்ளியின் முதல்வர் இரா.மேகலா., வரவேற் புரை வழங்கினார்.  பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் தலை மையேற்று சிறப்புரையை ஆற்றி னார். பள்ளிச் செயலர் ச.இரம்யா கண்ணன் இவ்விழாவிற்கு  வாழ்த் துரை வழங்கினார். 

மேலும் இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜனும், நகராட்சி மேனாள் தலைவர் த.புவியரசியும், குடியாத்தம் இன்னர்வீல் சங்கம் வசந்தி லட்சுமிபதியும்,  ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் பி.தன பால்., வழக்குரைஞர் அமர்நாத்தும் மற்றும்  ஓய்வு பெற்ற சுகாதார ஆசிரியர்   இந்துமதியும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப் பித்தனர்.

 மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஓய்வு பெற்ற தாவரவியல் ஆசிரியர் தமிழ் செல்வன், அறிவியல் என்றால் என்ன என்பதை பற்றியும்., நேர மேலாண்மை பற்றியும்  மாணவர் களுக்கு அழகாக எடுத்துரைத்தார். மேலும் அனைத்து சிறப்பு விருந் தினர்களும்  ஒவ்வொரு  மாணவரி டமும்  சென்று மாணவர்களின் செயல் திட்டத்தையும், அதன் விளக்கத்தையும் இனிதே கேட்ட றிந்தனர். இவ்விழாவினை பள்ளி யின் துணை முதல்வர் இரா.ராஜ குமாரி தொகுத்து வழங்கினார். பள்ளி அறிவியல் கண்காட்சி அய்ந்து மன்றங்களாக  பிரிக்கப் பட்டு,  பல்வேறு விளையாட்டுகள், பால்வெளி மண்டலம் (விமிமிலிரிசீ கீகிசீ நிகிலிகிஙீசீ) மற்றும் வனம் போன்ற வற்றை காட்சிப் படுத்தினர் . 

 இறுதியாக பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.எஸ். ராஜ்குமார் நன்றியுரை கூற அனைத்து ஆசிரியப் பெருமக்களின் ஒத்து ழைப்புடனும்,   இவ்விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment