தமிழக மூதறிஞர் குழுவின் (The Tamil Nadu Intellectuals' Forum) செயற்குழுக் கூட்டம் 21.12.2022 அன்று சென்னை பெரியார் திடலில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
செயற்குழுக் கூட்டத்திற்கு தமிழக மூதறிஞர் குழுவின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். தலைவர் முனைவர் சு.தேவதாஸ், துணைத் தலைவர்கள்: நீதிபதி இரா. பரஞ்ஜோதி, வேண்மாள் நன்னன், செயலாளர்கள்: மா.செல்வராஜ், ஆ. வெங்கடேசன், துணைச் செயலாளர் பா. பன்னீர்செல்வம், பொருளாளர் முனைவர் த.கு.திவாகரன், செயற்குழு உறுப்பினர்கள்: எஸ். இராமநாதன், ந. ஜெயராஜ், ஆர். மாணிக்கம். செயற்குழு உறுப்பினர்கள் டிசம்பர் மாத இறுதியில் கூடி, தமிழக மூதறிஞர் குழுவின் வருங்காலச் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடல் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment