குற்றம் சாட்டுவது யாரை? ஒன்றிய அரசையா, மாநில அரசையா? அண்ணாமலைக்கு டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

குற்றம் சாட்டுவது யாரை? ஒன்றிய அரசையா, மாநில அரசையா? அண்ணாமலைக்கு டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

சென்னை, டிச.1 அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? என்று தெரியவில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு தன்னுடைய பணியில் இருந்து தவறிவிட்டதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம்  மனு  கொடுத்துள்ளதாகவும் அண்ணாமலை  தெரிவித்தார். இந் நிலையில், பிரதமரின் தமிழ்நாடு வருகை யின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட் டிற்கு திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன்  அளித்த பேட்டியில் கூறியதாவது, பிரதமர்  ஒரு மாநிலத்திற்கு செல்லும்போது அடிப் படை ஏற்பாடுகளை மாநில அரசு செய்யும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஒன்றிய அரசின் அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு வந்து அவர்கள் முழுப் பொறுப் பையும் ஏற்றுக்கொள்வார்கள். மாநில காவல்துறைக்கு எந்தப் பணியும் இருக்காது.

முழு பொறுப்பும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவர்கள் கைவசம் எடுத்துக்கொண்டால் முதல்-அமைச்சர் கூட உள்ளே நுழைய முடி யாது. அந்த அளவிலே தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். இது எல்லோ ருக்கும் தெரிந்தது. அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறா? என்று தெரியவில்லை. அவர் தான் உள்துறை அமைச்சர். அவர் (அமித்ஷா) மீது உள்ள கோபத்தை இங்கே காட்டுகிறாரா? என்று புரியவில்லை. ஏற்கெனவே இவர் (அண்ணாமலை) ஒரு காவல்துறை அதிகாரி. இவருக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை என்றால் இவர் என்ன பணியாற்றினார் என்றும் எனக்கு புரியவில்லை. காலம் தாழ்த்தி கேட்பது மட்டுமல்ல... இந்த கேள்வியே எழக் கூடாது. பிரதமர் வருகிறார் என்றால் டில்லியில் இருந்து அதிகாரிகள் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள், தமிழ்நாடு காவல்துறையை தங்கள் உதவிக்கு பயன்படுத்திக்கொள்வார்களே தவிர அவர்களை தாண்டி எந்த தவறும் நடந்துவிட முடியாது. 

10 நாட்கள் முன்னதாகவே வந்து எந்திரங்களையெல்லாம் சரிபார்த்து, அவை சரியில்லை என்றால் உடனே மாற்றி அவற்றை சரிசெய்வது தான் டில்லியில் இருந்து வருகிற பிரதமரின் பாதுகாப்பு அலுவலகர்களுடைய பணி. இப்போது இவர் (அண்ணாமலை) குற்றம் கூறினார் என்றால் அவர் ஒன்றிய உள்துறையை குற்றம் கூறுவதாக பொருளே தவிர தமிழ்நாடு அரசை குற்றம் கூறுவதாக பொருள் அல்ல. எனவே தான் எனக்கு இந்த சந்தேகம் வருகிறது. ஒருவேளை அமித்ஷாவுக்கும் அவருக்கும் (அண்ணாமலை) எதாவது சண்டையா என்று சந்தேகம் வருகிறது. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தான் முழு பாதுகாப்பையும் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ்நாடு அரசு அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கு வார்கள். தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்கள் கூறிய வேலையை செய் வார்கள்'. இவ்வாறு  டி.கே.எஸ். இளங் கோவன் கூறினார்.

No comments:

Post a Comment