"கரோனா வைரஸ் காய்ச்சல் சளி போன்று நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்" சுகாதாரத் துறை இயக்குநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

"கரோனா வைரஸ் காய்ச்சல் சளி போன்று நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்" சுகாதாரத் துறை இயக்குநர்

சென்னை, டிச 17- ''கரோனா பாதிப்பை முற்றிலும் ஒழிக்க முடியாது. அது, மற்ற காய்ச்சல், சளி பாதிப்புகளை போல, நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கும்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், 2020ஆம் ஆண் டில் கரோனா பரவல் துவங்கியது.  டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக் ரான் ஆகிய மரபணு மாற்றம் அடைந்த தொற்றுக்குப் பின் தற்போது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில், தொற்று பாதிப்பு இல்லாத நிலை உள்ளது.

சென்னை, கோவை, செங்கல் பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட் டங்களில், ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகி வருகிறது. இவை முற்றிலும் குறைந்து, கரோனா இல்லாத தமிழ்நாடு உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கரோனா தொற்று குறைந்தாலும், அதன் பாதிப்பு  நம்மிடையே இருக்கும் என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.அத்துறையின் இயக் குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழ்நாட்டில், கரோனா தொற்று இருந்து கொண்டே தான் இருக்கும். சில நாட்கள் பூஜ்ஜிய நிலைய அடைந்தாலும், காய்ச்ச லோடு வருவோரை பரிசோதித் தால், ஓரிருவருக்கு பாதிப்பு தெரிந்த படி தான் இருக்கும். கரோனா முற் றிலும் நம்மை விட்டுப் போகாது. அதேநேரம், கரோனாவின் மரபணு மாற்றம் குறித்து, கண்காணித்து வருகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment