கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு விழா நடுவர் கடும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு விழா நடுவர் கடும் எதிர்ப்பு

பனாஜி, டிச. 1- கோவாவில் நடை பெற்ற இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில்  ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையிடப்பட்டதற்கு திரைப்பட விழாவின் நடுவர் நடாவ் லாபிட்  கடும் விமர்சனத்தை முன்வைத் தார்.

கோவாவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய 53ஆவது பன்னாட்டு திரைப்பட விழா 28.11.2022 அன்று  நிறைவ டைந்தது. 

இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், கோவாவில் உள்ள இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்று நிறைவு விழா வில் பேசுகையில், “இந்த பன் னாட்டு திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ஏனெனில், இது போன்ற மதிப்பு மிக்க திரைப்பட விழாவில் கலை, மற்றும் கருத்து கொண்ட படங்கள் திரையிடப்படும். 

ஆனால், இத்தகைய  திரைப் பட விழாவுக்கு பொருத்த மற்ற தாகவும் வெறுப்புணர்வைத் தூண்டும்  ஒரு பிரச்சார, படமாக வும்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக் கொள்ளும் என்பதால், வெளிப் படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கி றேன்” என்றார்.

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த மார்ச் 11ஆம் தேதி திரை யரங்குகளில் பல்வேறு மொழி களில் வெளியிடப்பட்ட திரைப் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 1990ஆம் ஆண்டு வாக்கில் காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிய நிகழ் வுகள் காட்சிகளாக திரைப் படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் அரசியல் களத்தில் பல் வேறு விவாதங்களையும் சர்ச் சைகளையும் எழுப்பியது குறிப் பிடத் தக்கது. 

திரைப்படம் வெளியானதிலிருந்து மதவெறி, இந்துத்து வாவாதிகள் தரப்பில் ஆதரவும், அத்திரைப்படம்குறித்து பரப் புரைகளும் மேற்கொள்ளப்பட் டன. அதேநேரத்தில் மதச்சார் பற்ற தரப்பிலிருந்து அத்திரைப் படம் நல்லிணக்கத்தை சீர் குலைத்து வெறுப்புணர்வை தூண்டுகிறது என்று என்று கடும் எதிர்ப்பும், பல்வேறு இடங்களில் அத்திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களும் வெடித்தன.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழா வில் அத்திரைப்படம் திரையிடப்பட்டதற்கு திரைப்பட விழா நடுவரே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment