வெறுப்பு சந்தையில் அன்பு கடையை திறக்கிறேன் - ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

வெறுப்பு சந்தையில் அன்பு கடையை திறக்கிறேன் - ராகுல்காந்தி

சண்டிகர்,  டிச. 22- காந்தி ராகுல்காந்தி யின் "பாரத் ஜோடோ" நடைப் பயணம் ராஜஸ்தானில் இருந்து அரியானாவுக்குள் நுழைந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைப் பயணம் என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற் கொண்டு வருகிறார். 

செப்டம்பர் 7ஆ-ம் தேதி தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கேரளா, கருநாடகா, மத்தியப்பிர தேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது. கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் நடைப்பயணமாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறு கிறது. பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த நடைப்பயணம் நடைபெற்று வரு கிறது. இந்த நடைபயணத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதி கரித்து வருகிறது. 

இந்நிலையில், ராகுல்காந்தியின் நடைப்பயணம் இன்று 105ஆ-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைப் பயணம் நடைபெற்ற நிலையில் நடைப்பயணம் இன்று அரியானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. ராஜஸ்தானில் இருந்து முன்டஹா எல்லை வழியாக யாத்திரை அரி யானாவுக்குள் நுழைந்துள்ளது. அரியானாவுக்குள் நுழைந்த நடைப் பயணத்துக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வர வேற்பு அளித்தனர். நடைப்பயணம் அரியானாவுக்குள் நுழைந்த நிலை யில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப் போது அவர் பேசுகையில்,  நடைப் பயணம் மூலம் 'வெறுப்பு' சந்தை யில் 'அன்பு' கடையை திறக்கிறேன். தற்போது, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி தலைவர்களுக் கும் பொதுமக்களுக்கும் இடையே இடைவேளை உள்ளது. மணி கணக்கில் பேசவேண்டும்... மக்கள் பேசுவதை கேட்கத்தேவையில்லை என்று தலைவர்கள் நினைக்கின்ற னர். இந்த பயணத்தில் நாங்கள் அதை மாற்ற நினைக்கிறோம்' என்றார்.

No comments:

Post a Comment