திருப்பத்தூர்,டிச.16- திருப்பத்தூரில் முப்பெரும் விழாப் பணிகள் கோலா கலமாக நடைபெற்று வருகிறது. முழு நீள பந்தல் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
நான்கு ஜேசிபி, புல்டோசர், ரோலர் இயந்திரங்கள் சமப் படுத்தும் பணியில் ஈடுபட் டுள்ளன. திமுக மாவட்ட செய லாளர் சட்டமன்ற உறுப்பினர் க. தேவ ராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்ல தம்பி, நகர திமுக செய லாளர் ஆவின் பால் பெருந் தலைவர் எஸ்.இராஜேந்திரன்உள்ளிட்ட முக்கிய பொறு ப்பாளர்கள் முப்பெரும் விழா பந்தலுக்கு வருகைதந்து பார்வையிட்டனர் அனைவரையும் மாநில அமைப்பாளர்உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு .சேகர், மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பெ.கலை வாணன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், வசூல்குழு பொறுப் பாளர் ஆத்தூர் சுரேசு உள்ளிட்ட விழாக் குழுவினர் வரவேற்றனர்.
திமுக மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் க.தேவராஜி விழா நன்கொடையாக ரூ.1,00,000த்தை மண் டல இளைஞரணி செயலாளர் சி.எ. சிற்றரசுவிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment