ஹமித் அன்சாரி
அண்மையில் வெளிவந்த ஒரு பத்திரிகை தலையங்கத்தின் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள "கலாச்சார வெறி" என்ற கருத்து மீண்டும் ஒரு முறை நினைவு கூரத்தக்கதான சொற்றொடராகும். "கலாச்சார தேசியம் என்ற பெயரில். ஹிந்தியை மறுபடியும் ஒரு முறை மிகமிக பிற்போக்குத்தனமாக முறையில் தூக்கிப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த அண்மைக் கால முயற்சியாக, இந்தியாவுக்கு சற்றும் தேவைப்படாத ஒரு நேரத்தில், கலாச்சார வெறி என்னும் பிரச்சினையை எழுப்பும் முயற்சி அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையே இல்லாத அதன் பன்முகக் கலாச்சாரங் களுக்கு இடையேயும், இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஒற்றுமையுடன் இருந்து வருகிறது."
அடையாளத்திற்கான மிகமிக முக்கியமான, இன்றியமையாத ஓரு கூறுதான் மொழி எனப்படுவது. பன்மொழிகள் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டில், காலனி ஆதிக்கத்தின் அதிகாரம் பெற்ற ஆங்கில மொழியை முற்றிலுமாகப் பயன்படுத்தாமல் ஓரங் கட்டுவது அல்லது அதன் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி நமது அரசமைப்பு சட்டத்தை இயற்றிய முன்னோர்கள் உணர்ச்சி மிகுதியுடன் விவாதித்தது மட்டுமன்றி, அதனை தேசிய கவுரவம் என்பதுடன் தொடர்பு படுத்தியும் பார்த்துள்ளனர். அரசமைப்பு சட்ட XVII பகுதி (343 - 351) பிரிவுகளின் சொல்லாட்சியில் முழு மனநிறைவளிக்காத சமரசம் ஒன்று மேற் கொள்ளப் பட்டதை பிரதிபலிப்பதாகவும் அது உள்ளது.
அலுவல் மொழி பற்றி அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது
தங்;கள் அலுவல் மொழியாக எதனை தேர்ந்து எடுப்பது என்பதை அரசமைப்பு சட்ட 345 ஆவது பிரிவு அரசுக்கே விட்டுவிட்டது. ஆனால், உண்மையாக நடந்தது என்னவென்றால், பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொடர்ந்து ஆங்கில மொழியையே பயன்படுத்தி வந்தன. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நடைமுறைகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் மசோதாக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் என்று அரசமைப்பு சட்ட 348 ஆவது பிரிவு நிர்ணயித்திருந்தது. அரசமைப்பு சட்டத்தின் VIII ஆவது பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ள மொழிகள் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்த மொழிகளுடன் பின்னர் சேர்க்கப்பட்ட (இப்போது உள்ள) 22 மொழிகளின் பன்முகத் தன் மையையும், சி;க்கல்களையும் எடுத்துக் கூறுவதாக, 1963 ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டமும் 1976 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அதன் விதி களும், 1987, 2007, 2011ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட திருத்தங்களும் இருக்கின்றன.
அலுவல் மொழி பற்றிய கேள்வி, அரசமைப்பு சட்ட குழுவிலும் அரசமைப்பு சட்ட வரைவிலும் உணர்வு மிகுந்த கருத்து வேறுபாடுகளைக் கொண்டு வந்தது. சட்டமன்ற மொழிகள், நீதிமன்றம் மற்றும் நீதித் துறை மொழிகள், ஒன்றிய அரசின் அலுவல் மொழிகள் ஆகியவை பற்றி அரசமைப்பு சட்டம் கையாண்டு உள்ளது.
அப்படி இருந்தும், அதில் சில விளக்க இயலாத குழப்பங்கள் தவிர்க்க இயலாதபடி புகுந்துவிட்டன. ஹிந்தி மொழியை மேம்படுத்துவது என்பது, இந்தி யாவின் கலப்பு கலாச்சாரத்தில், மற்ற மொழிகளை ஈர்ப்பவையாக இருக்கவேண்டும் என்று 351 ஆவது பிரிவு ஆணையிட்டுள்ளது. அவற்றில் ஹிந்துஸ் தானியும் அடங்கும் என்றாலும். அது பற்றி எட்டாவது பட்டியலில் எந்தக் குறிப்பும் காணப்பட வில்லை.
அலுவல் மொழி பற்றி அவ்வப்போது எழும் கருத்து மாறுபாடுகள்
பி.ஜி.கேர் ஆணையத்தில் தொடங்கி இன்று வரை நீடிக்கும் இந்த உணர்ச்சி மிகுந்த மாறுபாடுகள் அவ்வப்போது தலை தூக்கின. அதனால் 1965 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வன்முறை நிகழ்ச்சிகள் நடந்தேறின. இந்த ஆண்டு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்கள் தெரிவித்த ஹிந்தி திணிப்பு பற்றிய கண்டனங்கள் கூர்மையானவையாகவும், எந்தக் குழப்பமும் அற்றபடி மிகத் தெளிவானவையாகவும் இருந்தன. கடந்த சில நாட்களிற்குமுன் தமிழ் நாட்டில் ஹிந் தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடு களைக் கண்டிக்கும் விதமாக சேலத்தைச் சேர்ந்த 85 வயதான திமுக உறுப்பினர் தீக்குளித்து இறந்துள்ளார்.
மற்ற நாடாளுமன்றக் குழுக்களைப் போல அன்றி, 30 உறுப்பினர்களைக் கொண்ட அலுவல் மொழிக் குழுவின் தலைவராக உள்துறை அமைச்சர் இருக் கிறார். அலுவலக செயல்பாடுகளுக்காக ஹிந்தியைப் பயன்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அலுவலகக் கடிதப் போக்கு வரத்தில் ஹிந்தியின் பயன்பாடு அதிகரிக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இந்திய குடியரசுத் தலை வரிடம் அளிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை, அவரது பரிந்துரையுடன் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2010ஆம் ஆண்டு வரையிலான அறிக்கைகள் தான் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது. 10 மற்றும் 11 ஆம் அறிக்கைகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற போதிலும், அவற்றின் பரிந்துரைகள் என்ன என்று இதுவரை பொது மக்களுக்கு தெரியவில்லை.
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள்
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில், 11 ஆவது அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தது என்று கூறியதுடன், தொழில் நுட்பப் பயிற்சிகளின் பாடமொழி மற்றும் தேர்வுகள் பற்றிய சில முக்கியமான பரிந்துரைகளை எடுத்துக் கூறி அவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புகளையும், அவற்றுக்குத் தேவையான தரமுள்ள பாடநூல்கள் மற்றும் பயிற்சி உபகரணங்கள், அவற்றைப் போது மான அளவில் மாணவர்களிடம் கொண்டு செல்லத் தகுதி படைத்த ஆசிரியர்கள் இருப்பதைப் பற்றி உணர்ச்சி மிகுந்ததொரு விவாதத்தை அது துவக்கி வைத்தது. ஹிந்தி மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களின் திறமை என்பதும், ஹிந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுடன் ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள் சமஅளவில் போட்டி இட முடியாது என்பதும் இதனுடன் தொடர்புடைய ஒரு விவகாரமாகும்.
இந்த விவாதத்துக்கு ஆணி வேராக இருப்பது, பன்முக சமூகத்தின் அடையாளம் பற்றிய ஒரு பெரிய கேள்வியே ஆகும். மொழி பன்முகத் தன்மை உள்ளிட்ட பன்முகத் தன்மையும் ஒரே மொழிக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்பட்டு இருக்கவில்லை.
தேசிய மொழி என்னும் பிரச்சினை
இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழி ஆங்கிலமாக இருந்தது மாற்றப்பட்டு, அதன் இடத்தில் தேசிய மொழியான ஹிந்தி வைக்கப் படுவதால், கற்பிக்கும் மற்றும் தேர்வுகள் எழுதும் மொழி என்ற அளவில் பாடநூல்களை ஹிந்தியில் தயாரிக்கும் நடை முறைகளைக் கொண்டு வருவது, ஹிந்தியைத் தங்களது தாய் மொழியாகக் கொண்டு இருக்காதவர் களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் இருந்து பி;றந்ததுதான் இந்த மொழி வெறி என்ற குற்றச்சாட்டு. வேலை வாய்ப்பு சந்தையில் போட்டி போடுவதில் அவர்களுக்கு உள்ள பாதிப்புகள் மற்றும் பின்னடைவுகள் உள்ளங்கை நெல்லிக் கனி போல தெரிகின்றன.
அலுவல் மொழி என்ற அத்தியாயத்தில், அலுவல் மொழி என்ற விளக்கத்தில் அது ஒன்றியத்தின் மொழி மட்டுமே என்ற அளவில் நிச்சயமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதில் தேசிய மொழி என்று எந்த ஒரு மொழியும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. மாநிலங்களுக்கு கொள்கை அளவில் வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற பிரிவிலோ அல்லது அடிப்படை கடமைகள் என்ற பிரிவிலோ தேசிய மொழி என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. உண்மையைக் கூறுவதானால், பொதுப் பணிகளுக்கான வாய்ப்பு களில், ஹிந்தி பேசாத பகுதி மக்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் குடியரசுத் தலைவர் பரிசீலித்து பாதுகாக்க வேண்டும் என்று 344(3) ஆவது பிரிவு நிர்ணயித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் உள்துறை அமைச்சரின் குறிப்புகளில் எதிரொலிக்கும் ஆர்வத்தைப் பற்றி கூட்டாட்சி அரசு மேற்கொள்ள இயன்ற நடவடிக் கைகள் என்னென்ன என்று சற்று பார்க்கலாம். அரசமைப்பு சட்டப்படி மேற்கொள்ளக் கூடிய வழி 345 ஆவது பிரிவின்படி தங்களது அலுவல் மொழியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
அனைத்து அரசு அலுவல்களுக்கும் ஹிந்தி அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியை பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த 345 ஆவது பிரிவு ஒவ்வொரு சட்ட மன்றத்துக்கும் அனுமதி வழங்கு கிறது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் அலு வலக செயல்திட்டத்தின் வெற்றியின் மீது இது தொங்கிக் கொண்டு இருப்பதாகும். அவ்வாறு நடக்காமல் போனால், அதே போல இந்த விவகாரத்தை பிரச்சினைக்கு உட்பட்டதாகச் செய்து ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்ளலாம்.
இத்தகைய ஒரு நடவடிக்கை மேற் கொள்ளப் படுவது, உலகின் பல நாடுகளிலும் ஆங்கில மொழியை இணைப்பு மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதாலும், அதன் காலனி ஆதிக்கத் தொடர்பு ஒரு பழங்கால வரலாறு என்பதாலும், நல்லிணக்கம் மிகுந்த கூட்டாட்சித் தத்துவம் என்ற நீண்ட கால அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நல்ல அறிவுடைமை ஆகாதா?
நன்றி: 'தி இந்து' 29-11-2022
தமிழில்: தக. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment