தமிழினம் வாழ - நீவீர் வாழ்க பல்லாண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

தமிழினம் வாழ - நீவீர் வாழ்க பல்லாண்டு!

அறிவுலகத் தந்தையின் அகம் மலர்ந்த

திராவிட இயக்கத்தை

உலகமே வியந்து பார்க்கும் உன்னத பேரியக்கமாய்

உயர்வுடன் வழிநடத்தும் ஒப்பற்ற  தலைமையே !

சுறுசுறுப்பே சுணங்கிடத் துடிக்கும்

உம் ஓய்வறியா ஈரோட்டுப் பாதையின் 

பயணத்தைக் கண்டு !

தொண்ணூறில் எண்பது பொதுவாழ்க்கை

எந்தத் தலைவருக்கும் கிட்டிடாத உயர் வாழ்க்கை !

சமூக நீதி நாளாக போற்றிடும்

சரித்திரத் தலைவரின் கல்விச் சோலையில்

தன்மான தமிழினத்தை வழிநடத்தும்

எம் தமிழர் தலைவரின்

ஒப்பற்ற தலைமையின் கீழ் பணியாற்ற பெரும் பேறு பெற்றோம் !

ஒரு நூறு மட்டுமல்ல, பல நூற்றாண்டுகள் கடந்து

தமிழினம் வாழ - நீவீர் வாழ்க பல்லாண்டு!

முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்

பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி - 21.


No comments:

Post a Comment