அறிஞர் அண்ணா அன்று சொன்னது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

அறிஞர் அண்ணா அன்று சொன்னது

அறிஞர் அண்ணா அவர்கள் 1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கழகம் பெரு வெற்றி பெற்றபோது கீழ்க்கண்டவாறு கூறினார்:

"நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகிற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக் கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கின்ற - தமிழர்களைக் கை தூக்கிவிட்ட சர் தியாகராயர் சிலைக்கு அணிவித்து, அவரது பொன்னடிகளைத் தொழ வேண்டும். "மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத்திற்கு முதன் முதல் அறிவூட்டினீர்கள்; வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள்; உங்களது வழிவந்த நாங்கள், நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப்பட்டோம். நீங்களாவது செல்வச்சீமான்; நாங்கள் பஞ்சைப் பராரிகள்! ஆனால் சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை!" - என்று வீர வணக்கம் செலுத்தி விட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன்" 

அண்ணா கூறிய அந்த வெள்ளுடை வேந்தர் சிலைக்கு முன்தான், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவர் சிலைக்கு முன்னால் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் பெற்றுக் கொண்டார். வரலாற்றுத் தேனாறு பாய்ந்த நிகழ்ச்சி இது.


No comments:

Post a Comment