சிவகாசி மாநகரின் தொண் டறச் செம்மல் அம்மா திருமதி காஞ்சனா போஸ் (வயது 76) அவர்கள் நேற்று (1.12.2022) மாலை 6 மணியளவில் சிவகாசியில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம்.
திருமதி காஞ்சனா அம்மையார் அவர்கள் சிவகாசியின் தொழிலதி பரும், சிறந்த கொடையாள ருமான நண்பர் அ.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை இணையர் ஆவார். சீரிய பண்பாளர் - சிறந்த படிப்பாளி - எவரிடத்திலும் பண்புடன் பழகும் பொதுநல மனப்பான்மை உள்ள பான்மையர்.
நண்பர் அ.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மறைந்த பிறகு, அவர் மிகவும் மன வேதனையுடன் இழப்பைத் தாங்கி வாழ்ந்தார்.
நம்மிடத்தில் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகியவர்கள் - இருவருமே!
அவரது மறைவு அக்குடும்பத்தார்க்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் நமக்கும், நம் கழகத்திற்கும்கூட ஒரு பெரும் இழப்பு ஆகும். நமது பெரியார் அறக்கட்டளைக்கு மதிப்புமிகு நிலத்தை நன்கொடையாக எழுதித் தந்த பெரு வுள்ளம் படைத்தவர்கள் - இருபெரும் கொடைவள்ளல்கள்.
அவருக்கு நமது நன்றி கலந்த வணக் கத்தினையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு, குறிப்பாக அவரது மகள் - மற்ற உறுப்பி னர்களுக்கும் நமது ஆறுதலை உரித்தாக் குகிறோம்.
இறுதி நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சிவகாசி வானவில் மணி அவர் களும், ஏனைய கழகத் தோழர்களும் திராவிடர் கழகம் சார்பாக மறைந்த அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்துவர்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
2.12.2022
குறிப்பு: இறுதி நிகழ்வு இன்று (2.12.2022) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment